வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 66W சார்ஜிங்.. 12GB ரேம்.. மாடல்?
இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கும் லாவா அக்னி 4 (Lava Agni 4) ஸ்மார்ட்போனில் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling Sytem) கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே, அல்ட்ரா பிரீமியம் டிசைன் மற்றும் கலருடன் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகியது. இப்போது, கேமிங் பிரியர்கள் விரும்பும்படி கூலிங் சிஸ்டம் உறுதியாகி இருக்கிறது. இந்த புது லாவா ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிகரான டிசைன் மட்டுமல்லாமல், அந்த நிறுவனங்களையே தூக்கி சாப்பிடும்படியான பீச்சர்களுடன் இந்தியாவின் லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனம் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. இதில் அக்னி சீரிஸ் மாடல்கள் தனி வரவேற்பை பெற்றன. முன்னதாக வெளியான அக்னி 3 மாடலில் டூயல் அமோலெட் டிஸ்பிளே வந்தது.

ஆகவே, அடுத்த அக்னி மாடலிலும் டூயல் டிஸ்பிளே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெயின் டிஸ்பிளே மட்டும் கொண்ட மாடலாக லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்பது போஸ்டர் மூலம் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அதன் மீதான எதிர்பார்ப்பு துளியும் குறையவில்லை. ஏனென்றால், கேமரா டிசைனில் பட்டையை கிளப்பி விட்டது.
மெட்டாலிக் மிடில் ஃபிரேம் மட்டுமல்லாமல், அரிசோன்டல் கேமரா டிசைனை கொடுத்துள்ளது. அதிலும் டூயல் ரியர் கேமரா மட்டுமே கொடுத்து, அதற்கு மத்தியில் லாவா பிராண்ட்டிங்கை ஹைலைட் செய்துள்ளது. லூனார் மிஸ்ட் (Lunar Mist) மற்றும் பாண்டம் பிளாக் (Phantom Black) ஆகிய கலர்களில் வெளியாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.
இப்போது, விசி கூலிங் சிஸ்டம் கொண்ட மாடலாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது. இதனால் பர்ஃபாமென்ஸ் மற்றும் கேமிங் பிரியர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது. ஏனென்றால், அதிக பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடல்களில் ஹீட் கன்ட்ரோலுக்காக இந்த விசி கூலிங் சிஸ்டம் கிடைக்கும். அதேபோல அதிக பேட்டரி கேபாசிட்டி மாடல்களிலும் கிடைக்கும்.
இதனாலேயே இந்த போனின் சிப்செட் மற்றும் பேட்டரி கேபாசிட்டியை தெரிந்து கொள்வதற்கு லாவா பிரியர்கள் வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 20ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. மற்ற பீச்சர்கள் உறுதியாகவில்லை, ஆனால் கசிந்துள்ளன.

லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி கிடைக்க இருப்பதாக, முதலில் மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், டிசைன் மற்றும் கலர் விவரங்கள் வெளியாகிய பிறகு ஸ்லிம் லுக் கொடுப்பதால், 5000mAh பேட்டரியே கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேட்டரிக்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (Octa Core MediaTek Dimensity 8350) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்க இருக்கிறது. 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கிடைக்கிறது.
பில் ஷேப்டு டிசைனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. பட்ஜெட் விலையில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








