வெயிட் பண்ணா இதுக்கு பண்ணுங்க.. பட்ஜெட்ல PILL கேமரா.. AMOLED டிஸ்பிளே.. புது LAVA போன்.. எந்த மாடல்?
லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனத்தின் லாவா அக்னி 4 (Lava Agni 4) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் பாடி டிசைன் விவரங்கள் மட்டுமே வெளியாகி ஒட்டுமொத்த மார்கெட்டையும் அதிரவிட்டுள்ளது. பில் ஷேப்டு ரியல் கேமரா சிஸ்டம் மற்றும் மெட்டல் மிடில் ஃபிரேம் பாடி கொடுக்க இருக்கிறது. இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாக இருக்கிறது? பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் எப்படி உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் டூயல் டிஸ்பிளேவுடன் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. ஏனென்றால், டூயல் டிஸ்பிளேவுடன் பட்ஜெட் விலையில் கிடைத்ததால், தனியிடம் பிடித்தது. இப்போது, புதிய டிசைனுடன் இந்த லாவா அக்னி 4 வெளியாக இருக்கிறது. பில் ஷேப்டு டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Pill Shaped Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது.

அதேபோல மெட்டல் மிடில் ஃபிரேம் பாடியில் மேட் பினிஷிங் கொடுக்க இருக்கிறது. லாவா நிறுவனத்தின் முதல் ஹரிசோன்டல் கேமரா டிசைன் கொண்ட மாடலாகவும் இந்த அக்னி 4 ஸ்மார்ட்போன் இருக்கப்போகிறது. இந்த விவரங்கள் அடங்கிய போட்டோக்களை லாவா மொபைல்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
மற்ற பீச்சர்களை உறுதி செய்யவில்லை. இருப்பினும், வழக்கம்போல மார்கெட்டில் முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. டிசைனை பார்க்கையில் பிரீமியமாக இருப்பதால், பீச்சர்களிலும் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், லாவா அக்னி 3 போல டூயல் டிஸ்பிளேவை மட்டும் இதில் எதிர்பார்க்க முடியாது. நவம்பர் மாதத்தில் மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.
லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் ஹரிசோன்டல் கேமரா மற்றும் மெட்டல் மிடில் ஃபிரேம் மட்டுமல்லாமல், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speaker மற்றும் டூயல் மைக் (Dual Mic) கிடைக்க இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8350 எஸ்ஓசி (MediaTek Dimensity 8350 SoC) கிடைக்க இருக்கிறது. அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.
லாவா அக்னி 3 மாடலில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைத்தது. ஆனால், இதில் பிளாட் டிஸ்பிளே டிசைன் கிடைக்க இருக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை தெரிந்து கொள்ள முந்தைய மாடலான லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்தது.
மேலும், 1.74 இன்ச் (336 x 480 பிக்சல்கள்) செகண்டரி அமோலெட் டிஸ்பிளே பேக் பேனலில் கிடைத்து. சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைத்தது. ஆனால், அக்னி 4 மாடலில் டூயல் ரியர் கேமரா மட்டுமே வருகிறது. ஆகவே, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை எதிர்பார்க்கலாம்.
அக்னி 3 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்பீ கேமரா கிடைத்தது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைத்தது. 5000mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது. இந்த பீச்சர்களுடன் ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைத்தது. இப்போது, தள்ளுபடியில் கிடைக்கிறது. இதே பட்ஜெட்டில் அக்னி 4 மாடலை எதிர்பார்க்கலாம். ஏனென்றால், அதில் ஒரு டிஸ்பிளே வருகிறது.


Click it and Unblock the Notifications








