Home
Mobile

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Lava 5ஜி போன்.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மிகவும் அதிகம் எதிர்பார்த்த லாவா அக்னி 4 (Lava Agni 4) ஸ்மார்ட்போன் நாளை (நவம்பர் 20) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த புதிய போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கும். மேலும் ஆன்லைனில் வெளியான லாவா அக்னி 4 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் சப்போர்ட், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350 chipset) உடன் இந்த புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் விசி லிக்விட் கூலிங் சிஸ்டம் (VC Liquid Cooling System) ஆதரவு இந்த போனில் உள்ளது.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் புதிய லாவா போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் இருக்கும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய லாவா போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் இந்த புதிய போன் வெளிவரும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த லாவா போன வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய லாவா போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.30,000 பட்ஜெட்டில் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Agni 4 with AMOLED Display to be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X