இதை.. இதை தான எதிர்பார்த்தோம்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 66W சார்ஜிங்.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
லாவா அக்னி 4 (Lava Agni 4) ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, கேமரா, சிப்செட் பீச்சர்களை தொடர்ந்து, ஆக்சன் கீ கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் இந்த பீச்சர் பட்ஜெட் மாடலாக களமிறங்க இருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்க இருப்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. இதுவரை வெளியான பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) புரொடெக்சன் கொண்ட 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. பிளாட் டிசைனில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப இருக்கிறது.

1.7 எம்எம் பெசல் மட்டுமே கிடைக்கிறது. மேட் பினிஷிங் கொண்ட ஏஜி கிளாஸ் பேக் (AG Glass Back) பேனல் கிடைக்கிறது. இந்த பேனலுடன் மெட்டல் மிடில் ஃபிரேம் (Metal Middle Frame) கிடைக்கிறது. இந்த டிசைனில் லூனார் மிஸ்ட் (Lunar Mist) பாண்டம் பிளாக் (Phantom Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வர இருக்கிறது.
4300 எம்எம் விசி லிக்விட் கூலிங் சிஸ்டம் (VC Liquid Cooling System) மட்டுமல்லாமல், கேம் பூஸ்டர் மோட் (Game Booster Mode) கிடைக்கிறது. ஆகவே, இதுவொரு கேமிங் மடாலாக இருப்பது தெரிகிறது. இந்த பர்ஃபாமென்ஸ் கொடுப்பதற்காக ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (Octa Core MediaTek Dimensity 8350) சிப்செட் இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனில் வருகிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் மட்டுமல்லாமல், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கிடைக்கிறது. ஆன்டி-டிராப் டயமண்ட் ஃபிரேம் (anti-drop Diamond Frame) பாடி கொடுக்கிறது. ஆகவே, டிராப் ரெசிஸ்டன்ஸ் எதிர்பார்க்கலாம். இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆக்சன் கீ (Action Key) கிடைக்கிறது.
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் கிடைப்பதை போல இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனில் ஆக்சன் கீ கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கீ மூலமாக 100+ ஷாட்கட் காம்பினேஷன் கிடைக்க இருக்கிறது. கன்ட்ரோல்களுக்கு ஷார்ட் ப்ரஸ் (Short Press), டபுள் ப்ரஸ் (Double Press) மற்றும் லாங் ப்ரஸ் (Long Press) ஆப்ஷன்கள் கிடைக்க இருக்கிறது. டூயல் ரியர் கேமரா (Dual Rear Camera) வருகிறது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. பேட்டரி குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இதுவொரு ஸ்லிம் மாடலாக இருப்பதால், அதிக கேபாசிட்டி எதிர்பார்க்க முடியாது. 5000mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) எதிர்பார்க்கலாம்.
ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்க இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், முன்னதாக வெளியான லாவா அக்னி 3 (Lava Agni 3) ஸ்மார்ட்போனின் டூயல் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டும், அதன் விலை ரூ.20,000 பட்ஜெட்டிலேயே இருந்தது. ஆகவே, இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனின் விலையும் ரூ.20,000 பட்ஜெட்டில் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அமேசான் தளத்தில் வெளியாக இருக்கிறது. ஆகவே, அதில் அடுத்தடுத்து பீச்சர்கள் உறுதியாகி வருகின்றன. பில் ஷேப்டு கேமரா கொண்ட மாடல்களுக்கு இந்திய மார்கெட்டில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆகவே, இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனுக்கும் வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது. மேலும், இதுவொரு இந்திய பிராண்டாக இருப்பதால், கூடுதல் வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications