மொத்த ஆர்டரும் இந்த சாருக்கு தான்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 66W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் லாவா அக்னி 4 (Lava AGNI 4) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்க இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்க இருக்கிறது. இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் வருகிற நவம்பர் 25ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரூ.2,000 பேங்க் தள்ளுபடி கொடுக்கப்படும். ஆகவே, ரூ.20,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பில் ஷேப்டு கேமரா, விசி கூலிங் சிஸ்டம் மட்டுமல்லாமல், முழு பீச்சர்கள் மிரளவிடும்படி உள்ளன.

லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava AGNI 4 Specifications): இந்த அக்னி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (1220 x 2712 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) வருகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core MediaTeK Dimensity 8350 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 எம்சி6 ஜிபியு (Mali G615 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து இருக்கிறது.
இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், டூயல் கன்வெர்ஷன் கெய்ன் டெக்னாலஜி (Dual Conversion Gain Technology), நைட் மோட் (Night Mode) போன்ற பீச்சர்கள் இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் ஆக்சன் பட்டன் (Action Button) கிடைக்கிறது. இந்த ஆக்சன் பட்டனில் ஆப் ஓப்பன், வாய்ஸ் ரெக்கார்டிங், ஃபிளாஷ்லைட், சைலெண்ட் & ரிங்க், ஸ்கிரீன் ஷாட் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 19 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கிடைக்கிறது.
இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனில் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor) மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன. IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. பாண்டம் பிளாக் (Phantom Black) மற்றும் லூனார் மிஸ்ட் (Lunar Mist) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








