Home
Mobile

நவம்பர் உறுதி.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. சும்மா கில்லி மாதிரி வெளிவரும் Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் அடுத்து லாவா அக்னி 4 (Lava Agni 4) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் நவம்பர் மாதம் அறிமுகமாகும் என்று தற்போது டீசர் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350 chipset)உடன் இந்த புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

நவம்பர் உறுதி.. சும்மா கில்லி மாதிரி வெளிவரும் Lava 5ஜி போன்..

அதேபோல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் சப்போர்ட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய லாவா போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலா மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் இருக்கும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த புதிய லாவா போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

7000mAh பேட்டரி உடன் லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த லாவா போன வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய லாவா போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட வசதிகளும் இந்த லாவா போனில் உள்ளது. பின்பு ஆன்லைனில் வெளியான தகவலின்படி, லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.25,000-க்கு கீழ் வெளியாகும்.

photo credit: 91mobiles, lava

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Agni 4 to be launched in India in November 2025: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X