இதுதான் புது Lava 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
லாவா அக்னி 4 (Lava Agni 4) போன் இந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த போனின் படங்கள் வெளியாகி உள்ளது. அதாவது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா போன். அதுவும் இந்த போனின் கேமராக்களுக்கு மேல் டூயல் எல்இடி பிளாஸ் உள்ளது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் நத்திங் போன் 2ஏ மாடலை போன்று இருக்கிறது இந்த புதிய லாவா அக்னி 4 போன். மேலும் IECEE சான்றிதழ் தளத்தில் LBP1071A என்ற மாடல் நம்பர் உடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் காணப்பட்டது. எனவே வரும் நாட்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை பார்க்கலாம்.

லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட்(MediaTek Dimensity 8350 chipset) உடன் இந்த புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் சப்போர்ட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய லாவா போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் இருக்கும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய லாவா போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

7000mAh பேட்டரி உடன் லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த லாவா போன வெளிவரும் என்று கூறப்படுகிறது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய லாவா போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.25000-க்கு கீழ் இந்த புதிய லாவா போன் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








