அவசரப்படாதீங்க ப்ரோ.. நவ.10-க்கு அப்புறம் இது நின்னு பேசும்.. புது LAVA போன் சிப்செட் கன்ஃபார்ம்.. எந்த மாடல்?
லாவா மொபைல்ஸ் நிறுவனத்தின் அடுத்த மாடலாக களமிறங்க இருக்கும் லாவா அக்னி 4 (Lava Agni 4) ஸ்மார்ட்போனின் சிப்செட், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. ஏற்கனவே, டிசைன் மற்றும் கலர் வேரியண்ட்கள் உறுதியாகி எதிர்பார்ப்பை எகிறவிட்டன. இப்போது, சிப்செட் உறுதியாகி பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது.
இந்திய மார்கெட்டில் நவம்பர் 20ஆம் தேதி இந்த லாலா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த தேதிக்கு முன்பே பில் ஷேப்டு கேமரா டிசைனுடன் அக்னி 4 மாடல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தால், எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. இப்போது வெளியீட்டு தேதி நெருங்குவதால், நாளுக்கு நாள் பீச்சர்கள் உறுதியாகி வருகின்றன.

முன்னதாக அரிசோன்டல் கேமரா டிசைன் (Horizontal Camera Design), அலுமினியம் ஃபிரேம் (Aluminium Frame) மற்றும் டூயல் ஷேட்கள் உறுதி செய்யப்பட்டன. இதில் லூனார் மிஸ்ட் (Lunar Mist) பாண்டம் பிளாக் (Phantom Black) ஆகிய கலர்களுடன் போஸ்டர்கள் வெளியாகின. பிரீமியம் லுக் கொடுக்கும் மாடலாக இருப்பது அந்த போஸ்டர்கள் மூலம் தெரிய வந்தது.
இந்த பீச்சர்களை தொடர்ந்து, இப்போது சிப்செட், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. ஆகவே, இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (Octa Core MediaTek Dimensity 8350) சிப்செட் கிடைக்க இருக்கிறது. LPDDR5x ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் உறுதியாகி இருக்கிறது. இது பிரீமியம் மாடல்களில் கிடைக்க கூடியது.
ஆகவே, இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனின் பர்ஃபாமென்ஸ் பிரீமியம் மாடல்களுக்கு நிகராக இருக்க வாய்ப்புள்ளது. டிசைனில் மட்டும் பிரீமியம் காட்டாமல், சிப்செட், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பீச்சர்களிலும் பட்டையை கிளப்ப இருப்பது தெரிகிறது. இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் மட்டுமே லாவா நிறுவனத்தால், அதிகர்பூர்மாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. பேட்டரி பீச்சர்களில் மட்டும் 7000mAh அல்லது 5000mAh என்று 2 கேபாசிட்டிகள் கசிந்துள்ள. ஆகவே, அதை பிறகு பார்க்கலாம். மற்ற கசிந்த பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. முந்தைய அக்னி ஸ்மார்ட்போனில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கிடைத்தது. ஆனால், இதில் பிளாட் அமோலெட் டிஸ்பிளே வர இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிட்டத்தட்ட உறுதியாகும். இருப்பினும், இது பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் சோனி சென்சார் (SONY Sensor) எதிர்பார்க்கலாம்.
66W ஃபாஸ்ட் சார்ஜிங், டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வர இருக்கிறது. 6 ஜிபி ரேம் வேரியண்ட்டையும் எதிர்பார்க்கலாம். ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. நவம்பர் 20ஆம் தேதிக்கு முன்பே இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகலாம்.


Click it and Unblock the Notifications








