யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 12GB ரேம்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. இது எந்த மாடல்?
லாவா (Lava) நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலான லாவா அக்னி 4 (Lava Agni 4) நவம்பர் 20ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. முதல் முறையாக பில் ஷேப்டு கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக களமிறங்க இருக்கிறது. அதேபோல 7000mAh பேட்டரியுடன் அதிக கேபாசிட்டி கொண்ட மாடலாகவும் இருப்பது தெரிகிறது. கேமரா, டிஸ்பிளே, சிப்செட் போன்ற பீச்சர்கள் கசிந்துள்ளன. இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 20ஆம் தேதி வெளியாக இருப்பதும், பில் ஷேப்டு கேமரா, மெட்டல் பாடி மற்றும் பிளாக் கலரில் கிடைக்க இருப்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. அதேபோல டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் டூயல் ஸ்பிளாஷ் உறுதியாகி இருக்கிறது. இந்த பீச்சர்களை தவிர மற்ற பீச்சர்கள் உறுதியாகவில்லை. இருப்பினும், மார்கெட்டில் கசிந்துவிட்டன.

லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8350 எஸ்ஓசி (MediaTek Dimensity 8350 SoC) கிடைக்க இருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட இருக்கிறது.
பிளாட் டிசைனில் பஞ்ச்-ஹோல் ஷூட்டர் வர இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வர இருக்கிறது. இது பில் ஷேப்டு டிசைன் கொண்ட லாவாவின் முதல் அரிசோன்டல் கேமராவாக இருக்கப் போகிறது.
8 ஜிபி ரேம் முதல் 12 ஜிபி ரேம் வரையில் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது. 128 ஜிபி, 256 ஜிபி மெமரி எதிர்பார்க்கலாம். இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. மெட்டல் மிடில் ஃபிரேம் ஆனது அலுமினியம் பாடியாக கிடைக்க இருக்கிறது.
மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டூயல் மைக் (Dual Mic) வர இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) போன்ற பீச்சர்களையும் எதிர்பார்க்கலாம். இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் ரூ.24,999 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. ஏற்கனவே வெளியான லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, இந்த மாடலை ரூ.24,999 பட்ஜெட்டில் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். அதைவிட மலிவான விலைக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்போது, அக்னி 3 மாடலின் பீச்சர்களை பார்க்கலாம்.
இந்த லாவா ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் 4என்எம் (MediaTek Dimensity 7300X 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 449 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
மேலும், பேக் பேனலில் 1.74 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா உள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களுடன் அக்னி 4 கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








