Home
Mobile

அறிமுகமானது புது Lava 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. ஆண்ட்ராய்டு 15 OS.. எந்த மாடல்? என்ன விலை?

லாவா நிறுவனம் புதிய லாவா அக்னி 4 (Lava Agni 4) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் சப்போர்ட், 1.07 பில்லியன் கலர்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அறிமுகமானது புது Lava 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350 chipset) உடன் இந்த புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 3 ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் ரியர் மற்றும் செல்பி கேமராக்களில் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance)வசதியுடன் இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம்+ 256ஜிபி மெமரி கொண்ட லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. வரும் நவம்பர் 25-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. பாண்டம் பிளாக் (Phantom Black) மற்றும் லூனார் மிஸ்ட் (Lunar Mist) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Agni 4 launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X