ஒட்டுமொத்த மார்க்கெட்டும் அதிர போகுது.. IP69 ரேட்டிங்.. நவ.20-ல் அறிமுகமாகும் புது Lava 5ஜி போன்.. எந்த மாடல்?
லாவா அக்னி 4 (Lava Agni 4) ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 20-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் பேட்டரி, சிப்செட், கேமரா உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரி உடன் வெளிவரும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் டிப்ஸ்டர் டெபயன் ராய் தற்போது வெளியிட்ட தகவலின்படி, இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் தான் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350 chipset) உடன் இந்த புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் சப்போர்ட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய லாவா போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் இருக்கும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய லாவா போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த லாவா போன வெளிவரும் என்று கூறப்படுகிறது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய லாவா போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.30000-க்கு கீழ் இந்த புதிய லாவா போன் அறிமுகமாகும்.
குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications