Home
Mobile

மாஸ் காட்டும் லாவா.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது அட்டகாசமான போன்.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் லாவா போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் லாவா நிறுவனம் லாவா அக்னி 4 (Lava Agni 4) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் ஆனது எல்ஜி போன்களை போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது இந்த போனின் பின்புறம் டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் நடுவில் ஒரு எல்இடி பிளாஸ் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் வெள்ளை நிறத்திலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மாஸ் காட்டும் லாவா.. வருகிறது அட்டகாசமான போன்.. எந்த மாடல்?

லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் சப்போர்ட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக கூறப்படுகிறது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350 chipset)உடன் இந்த புதிய லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி + 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய லாவா போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலா மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த புதிய லாவா போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

7000mAh பேட்டரி உடன் லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த லாவா போன வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.25,000-க்கு கீழ் வெளியாகும் என்று கூறப்படுகிறது

photo credit: 91mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Agni 4 full specifications and images leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X