மொத்த சாம்ராஜ்யமே இதுக்கு காத்திருக்கு.. 7000mAh பேட்டரி.. 66W பாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த மார்கெட்டும் காத்திருக்கும்படியான மாடலாக லாவா அக்னி 4 (Lava Agni 4) ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏனென்றால், சீன நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான பில் ஷேப்டு கேமரா மட்டுமல்லாமல், பீச்சர்களிலும் பட்டையை கிளப்பும்படி இந்த அக்னி 4 வெளியாக இருக்கிறது. வெளியீட்டு தேதி உறுதியாகியதை அடுத்து இப்போது கலர் மற்றும் டிசைன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது. மெட்டல் மிடில் ஃபிரேம் மட்டுமல்லாமல், மேட் பினிஷிங்கில் அல்ட்ரா பிரீமியம் பாடி கிடைக்க இருக்கிறது. இந்த லாவா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
இந்தியாவில் லாவா நிறுவனத்தின் அக்னி ஸ்மார்ட்போன்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஏனென்றால், லேட்டஸ்ட் டிசைனை பட்ஜெட் விலையில் இந்த மடால்கள் கொடுக்கின்றன. முன்னதாக வெளியான லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனிலும் அப்படித்தான், பட்ஜெட் விலையில் டூயல் டிஸ்பிளே கொடுக்கப்பட்டது. ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்கும் முதல் டூயல் டிஸ்பிளே மாடலாகவும் அது இருந்தது.

இதனால் அடுத்த அக்னி ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகமாக இருந்தது. இந்த நேரத்திலேயே லாவா மொபைல் (Lava Mobiles) நிறுவனமானது, பில் ஷேப்டு கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதை உறுதி செய்தது. முழு டிசைனை உறுதிப்படுத்தாமல், கேமரா டிசைன் மற்றும் மெட்டல் மிடில் ஃபிரேம் விவரங்களை உறுதிப்படுத்தியது.
இப்போது, கலர்கள் மற்றும் முழு டிசைனையும் உறுதி செய்துள்ளது. ஆகவே, லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனில் லூனார் மிஸ்ட் (Lunar Mist) மற்றும் பாண்டம் பிளாக் (Phantom Black) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. லூனார் மிஸ்ட் மாடலானது, கிரே ஷேடு கலரில் இருக்கிறது. அலுமினியம் ஃபினிஷிங் கொண்ட மெட்டல் மிடில் ஃபிரேம் கிடைக்கிறது. பிளாக் கலரிலும் பிளாக் கோட்டெட் அலுமினியம் பினிஷிங் கிடைக்கிறது.
பில் ஷேப்டு டிசைனில் அரிசோன்டல் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருப்பது தெரிகிறது. அதேபோல டூயல் ஃபிளாஷ் (Dual Flash) இதில் கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் டூயல் மைக்குகள் (Dual Mics) இடம்பெற்றிருக்கிறது. அதேபோல இந்த லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனில் பிளாட் டிசைனில் டிஸ்பிளே கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
முன்னதாக வெளியான லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், பேக் பேனலில் மினி டிஸ்பிளே கிடைத்தது. ஆனால், இதில் பிளாட் டிசைனில் மெயின் டிஸ்பிளே மட்டுமே கிடைக்க இருக்கிறது. இந்த டிசைன் விவரங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. அதேபோல நவம்பர் 20ஆம் தேதி இந்திய மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது.
லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava Agni 4 Specifications): இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. முன்னதாக 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், கலர் மற்றும் டிசைன் விவரங்கள் உறுதியானதை அடுத்து 5000mAh பேட்டரி கிடைக்க இருப்பதாக கசிந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. லாவா உறுதி செய்த பிறகே தெரியவரும். மேலும், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது.
6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் அந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் வர இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + அல்ட்ரா வைடு கேமரா வர இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வர இருக்கிறது. இந்த பீச்சர்கள் கலர் விவரங்களை அடுத்து கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications








