அசத்துறீயே LAVA.. இவ்ளோ கம்மி விலைக்கு 7000mAh பேட்டரி உடன் 5ஜி போன்-ஆ.. அப்புறம் என்ன ஆர்டர் தான்!
முதலில் - இந்திய பிராண்ட் ஆன லாவாவின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் ஒன்பிளஸ் 15, ஐக்யூ 15, ரியல்மி ஜிடி 8 ப்ரோ, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸ் என பல வெயிட்டான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் இந்த நவம்பர் மாதத்தில்.. லாவா நிறுவனமும் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது!
அது லாவா அக்னி 4 5ஜி (Lava Agni 4 5G) ஸ்மார்ட்போனாகும். இது இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாவா நிறுவனமானது ஒரு சோசியல் மீடியா போஸ்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இது கடந்த அக்டோபர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிறகான ஸ்மார்ட்போனா இருக்கும். இது மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட்டுடன் வரும் என்றும் டீஸ் செய்யப்பட்டுள்ளது. சரியான சிப்செட்டை வெளிப்படுத்தாமல், இந்நிறுவனம் டைமன்சிட்டி லோகோவை மட்டும் பகிர்ந்துள்ளது.
அந்த சிப்செட் - யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350 Soc) ஆக இருக்கலாம். கடந்த நவம்பர் 1 ஆம் தேதியன்று லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா செட்டப்பும் டீஸ் செய்யப்பட்டு இருந்தது
அதன் வழியாக லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்ட டேப்லெட் வடிவ டூயல் கேமரா யூனிட்டை பார்க்க முடிகிறது. இது பழைய லாவா அக்னி 3 5ஜி மாடலில் நாம் பார்த்த ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பிலிருந்து முற்றிலும் விலகுவதை குறிக்கிறது. இரண்டு லென்ஸ்களின் நடுவில் லாவா (AGNI) பிராண்டிங் சேர்க்கப்பட்டுள்ளது.
இதை தாண்டி, லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனில் 7000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி பேக் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இந்த பேட்டரி கெப்பாசிட்டியை உறுதியாக கூற முடியாது என்றாலும், IECEE சான்றிதழ் வலைத்தளத்தில் கிடைக்கப்பட்ட தகவலை வைத்து பார்க்கும் போது - சில வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பிட்ட ஐஇசிஇஇ சர்டிபிகேட் லிஸ்டிங் உண்மையாகும் பட்சத்தில், லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனில் நாம் பார்த்த 5000mAh பேட்டரி உடன் ஒப்பிடும் போது, லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனின் 7000mAh பேட்டரி ஆனது ஒரு மிகப்பெரிய தாவலாக இருக்கும்.
இது தவிர லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனின் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் உடனான 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இந்தியாவில் லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.24,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
நினைவூட்டும் வண்ணம் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது. இருப்பினும் தற்போது அமேசான் இந்தியாவில் ரூ.4000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு பின் இதன் விலை இன்னும் கூட குறைக்கப்படலாம்.
முன்னதாக அறிமுகமான லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் 6.78-இன்ச் 1.5கே (1200 x 2652 பிக்சல்ஸ்) அமோஎல்இடி டிஸ்பிளே
- 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் சிப்செட்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 112 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூவுடன் கூடிய 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) உடன் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 66W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








