சைனீஸ் 5G போன்களை நசுக்கி பிதுக்கும் விலை.. 7000mAh பேட்டரி, Zero Bloatware உடன் புது LAVA போன்!
இந்திய பிராண்ட் ஆன லாவா (LAVA) நிறுவனமானது.. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள சைனீஸ் 5ஜி ஸ்மார்போன்களை எல்லாம் அப்படியே ஓரங்கட்டும் அம்சங்களுடன் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக அந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமும் லீக் ஆகியுள்ளது.
என்ன மாடல்? நவம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் பாடிக்கு பதிலாக அலுமினிய பிரேம், டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் பக்கவாட்டில் ஒரு ஒரு புதிய பட்டன் ஆகியவைகளுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் உள்ள புதிய பட்டன் ஆனது ஆப்பிளின் ஐபோன்களில் உள்ள கேமரா கண்ட்ரோல் பட்டனை போல செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எக்ஸ் தளம் வழியாக லாவா பகிர்ந்துள்ள சமீபத்திய பதிவின் படி, வரவிருக்கும் லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது லூனார் மிஸ்ட் மற்றும் பாண்டம் பிளாக் 2 என்கிற 2 கலர்களில் வாங்க கிடைக்கும். மேலும் லாவவின் டீஸர்கள் ஆனது ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்களையும், மிடில் ஃப்ரேமின் கீழ் வலதுபுறத்தில் கூடுதலாக ஒரு பட்டனையும் காட்டுகின்றன.
என்ன விலைக்கு வரலாம்? டிப்ஸ்டர் பராஸ் குக்லானி (@passionategeekz) வழியாக கிடைத்த தகவலின்படி, லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.30,000 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும். நினைவூட்டும் வண்ணம் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது. இருப்பினும் தற்போது இ-காமர்ஸ் தளங்களின் வழியாக குறைக்கப்பட்ட விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.
லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது USB 3.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ், LPDDR5X ரேம் மற்றும் மேம்பட்ட ஏஐ அம்சங்களை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது "ஜீரோ ப்ளோட்வேர்" அனுபவத்தை வழங்குவதும், அதன் உரிமையாளர்களுக்கு இலவச ஹோம் ரீப்ளேஸ்மென்ட் சேவையுடன் வருவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் டைமன்சிட்டி 8350 சிப்செட்டை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு பெரிய 7000mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம் என்றும் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. கடைசியாக இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் FHD+ டிஸ்பிளேவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அறிமுகமான லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் 1.5கே (1200 x 2652 பிக்சல்ஸ்) அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
கேமராக்களை பொறுத்தவரை ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூவுடன் கூடிய 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) உடன் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக 66W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








