விட்ராதீங்க சார்.. ரூ.15,998 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 66W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இதுவரை கிடைக்காத பட்ஜெட்டில் டூயல் அமோலெட் டிஸ்பிளே கொண்ட லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) போன் கிடைக்க இருக்கிறது. ரூ.5,000 டிஸ்கவுண்ட் போக அமேசான் விற்பனையில் (Amazon Sale) வருகிறது. ரூ.20,999 பட்ஜெட்டில் மார்கெட்டுக்கு வந்த இந்த லாவா அக்னி 3 5ஜி போனானது இப்போது வெறும் ரூ.15,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
சீன ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான பீச்சர்கள் மற்றும் டிசைனில் இந்தியாவின் லாவா நிறுவனம் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. இதில் டூயல் டிஸ்பிளேவுடன் சீன நிறுவனங்களே கொடுக்க முடியாத பட்ஜெட்டில் லாவா அக்னி 3 5ஜி வெளியானது. இதனால் விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இதை, மேலும் சூடுபிடிக்க வைக்கும்படி ரூ.5,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

லாவா அக்னி 3 5ஜி அம்சங்கள் (Lava Agni 3 5G Specifications): இந்த லாவாவில் டிஸ்பிளே பீச்சர்களே ஹை-லைட்டாக இருக்கின்றன. ஏனென்றால், 3டி கர்வ்ட் (3D Curved) அமோலெட் பேனலுடன் 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் (HDR) மற்றும் வைடுவின் எல்1 (Widevine L1) சப்போர்ட் உள்ளது.
மேலும், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 429 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. 2டி அமோலெட் பேனலுடன் 1.74 இன்ச் (336 x 480 பிக்சல்கள்) மினி டிஸ்பிளே கிடைக்கிறது. இது ரியர் கேமராவுடன் வருகிறது. ஆகவே, 2 டிஸ்பிளேவை பயன்படுத்தி கொள்ளலாம். மினி டிஸ்பிளேவில் கேமரா, நோட்டிபிகேஷன்கள் மற்றும் அனிமேஷன்கள் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது.
ரூ.20,999 பட்ஜெட்டில் வெளியானதால், அந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் (Octa Core 4nm MediaTek Dimensity 7300X) சிப்செட் கிடைக்கிறது. ஆனால், ஒரு வருட பழைய மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே இந்த லாவா அக்னி 3 5ஜி போனில் கிடைக்கிறது.

16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) கிடைக்கிறது. 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த வேரியண்ட்களுக்கு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடையாது. 19 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளு்படி 66W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி வருகிறது. டிரிபிள் ரியர் கேமரா உள்ளது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. மெயின் கேமராவில் சோனி சென்சார் + ஓஐஎஸ் டெக்னாலஜி வருகிறது. டெலிபோட்டோவில் 3X ஆப்டிகல் ஜூமிங், 30X சூப்பர் ஜூம் மற்றும் ஈஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் + ஈஐஎஸ் டெக்னாலஜி வருகிறது.
முன்பே சொன்னதை போல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.20,998ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் விற்பனையில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.5,000 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,998 பட்ஜெட்டில் வாங்கலாம். இது லிமிடெட்-டைம் ஆஃபராகும். ஆகவே, விரைவில் ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








