Home
Mobile

அமேசான் மிரளுது.. ரூ.5000 ரேட் கட்.. ரூ.15,999-க்கு 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 66W சார்ஜிங்!

அமேசான் (Amazon) தளத்தில் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் மெயின் கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டில் ரேட் கட் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் இருக்கிறது. டூயல் டிஸ்பிளே கொண்ட இந்த லாவா அக்னி 3 5ஜி போனின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆக இருந்தது. அதுவே சார்ஜருடன் வாங்கினால், ரூ.22,999ஆக விலை இருந்தது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும் இருந்தது. ஆனால், இப்போது ரூ.17,999 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது.

அமேசான் மிரளுது.. ரூ.5000 ரேட் கட்.. ரூ.15,999-க்கு 3D டிஸ்பிளே மாடல்!

ஆகவே, 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆகவே, ரூ.3,000 நேரடி ரேட் கட்டில் வாங்கு கொள்ளலாம். இந்த ரேட் கட் மட்டுமல்லாமல், எச்டிஎப்சி பேங்க் கார்டுக்கு கூடுதலாக ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கும் ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ள முடியும். மொத்தமாக ரூ.5,000 கம்மி விலைக்கு கிடைப்பதால், அடித்து பிடித்து ஆர்டர் போடப்படுகிறது. இந்த லாவா போனில் பிரிஸ்டின் கிளாஸ் (Pristine Glass) மற்றும் ஹெதர் கிளாஸ் (Heather Glass) ஆகிய கலர் வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

மெயின் டிஸ்பிளே மற்றும் டிரிபிள் ரியர் கேமராவுக்கு (Triple Rear Camera) அருகே செகண்டரி டிஸ்பிளே கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் 8.8 எம்எம் தடிமன் கிடைக்கிறது. 212 கிராம் எடை இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் உள்ளது.

அமேசான் மிரளுது.. ரூ.5000 ரேட் கட்.. ரூ.15,999-க்கு 3D டிஸ்பிளே மாடல்!

ஆகவே, டிசைனில் பிரீமியம் போன்களுக்கு நிகரான லுக் எதிர்பார்க்கலாம். அதேபோல இந்த பட்ஜெட்டில் டூயல் டிஸ்பிளே கொடுக்கும் மாடலாகவும் இது இருக்கிறது. டிசைன் மட்டும் போதுமா? டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி போன்ற மற்ற பீச்சர்கள் எப்படி என்று பார்க்க வேண்டமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதை பார்ப்போம்.

லாவா அக்னி 3 5ஜி அம்சங்கள் (Lava Agni 3 5G Specifications): இந்த லாவா போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300X 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 ஜிபியு கிடைக்கிறது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சார்ஜருடன் 5000mAh பேட்டரி வருகிறது.

1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 1.74 இன்ச் (336 x 480 பிக்சல்கள்) செகண்டரி டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 429 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர் (HDR) கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் ஆடியோ சப்போர்ட் பெற்று கொள்ளலாம்.

இந்த லாவா அக்னி 3 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் அதில் சோனி சென்சார் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் அதில் ஈஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. இதில் 3X ஆப்டிகல் ஜூமிங் செய்து கொள்ளலாம். 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் முன்பக்கம் 16 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Agni 3 With 50MP Camera Available At Rs 15999 in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X