தூக்குடா இந்த செல்லத்த.. 2 டிஸ்பிளே, Action Button, 66W சார்ஜிங், OIS கேமரா.. ஆபர் விலையில் Lava Agni 3 சேல்!
2 தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகமாகி இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள, லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று (அக்.9) முதல் தொடங்கியது. லாவாவின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது எதிர்பார்க்கப்பட்ட விலையை விட ரூ.10,000 மலிவான விலைக்கு அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன விலைக்கு இது வாங்க கிடைக்கிறது? இதன் 2 தனித்துவமான அம்சங்கள் என்னென்ன? வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதன் மீது கிடைக்கும் விற்பனை சலுகைகள் என்னென்ன? இதோ விவரங்கள்:
லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனின் 2 தனித்துவமான அம்சங்கள் என்னென்ன? முதலாவதாக - இது ஆப்பிள் ஐபோன் மாடல்களில் இருப்பது போன்ற ஆக்ஷன் பட்டனை கொண்டுள்ளது. இரண்டாவதாக - இது பேக் பேனலில் உள்ள கேமரா மாட்யூலுக்கு அருகே செக்கண்டரி டிஸ்பிளே ஒன்றையும் கொண்டுள்ளது.

லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் சலுகைகள் என்னென்ன? அமேசான் இந்தியா மற்றும் லாவாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வாங்க கிடைக்கும் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சார்ஜர் இல்லாமல் இன்னும் குறைந்த விலையில் வாங்குவதற்கான விருப்பத்தையும் கொண்டுள்ளது.
அதாவது லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் லாவா பிராண்டட் சார்ஜர் இல்லாமல் இதை ரூ.20,999 க்கு வாங்க முடியும். மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதுதவிர்த்து எஸ்பிஐ கார்ட்டை பயன்படுத்தி லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். இதன் மூலம் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை சார்ஜர் உடன் ரூ.20,999 க்கும், சார்ஜர் இல்லாமல் ரூ.19,999 க்கும் வாங்க முடியும். 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை ரூ.22,999 க்கு வாங்க முடியும்.
மேலும் ஏற்கனவே லாவா ஸ்மார்ட்போன்களை பயனர்களுக்கு லாயல்டி சலுகைகளும் அணுக கிடைக்கும். ஆனால் இது lavamobiles.com வலைத்தளம் வழியாக பிரத்தியேகமாக கிடைக்கும். இதன்கீழ் லாவா அக்னி 2 பயனர்களுக்கு ரூ.8,000 உடனடி தள்ளுபடி, லாவா அக்னி 1 பயனர்களுக்கு ரூ.4,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன? ப்ரிஸ்டின் ஒயிட் மற்றும் ஹீதர் ப்ளூ என்கிற 2 கலர்களில் வாங்க கிடைக்கும் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் கர்வ்டு டிஸைனை பெற்றுள்ளது. இதில் இரண்டு அமோஎல்இடி டிஸ்பிளேக்கள் உள்ளன: முன்பக்கத்தில் 6.78-இன்ச் 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே உள்ளது; பின்பக்கத்தில் 1.74-இன்ச் செகண்டரி டிஸ்பிளே உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (MediaTek Dimensity 7300) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வருகிறது. கூடவே 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறும் என்கிற வாக்குறுதியையும் பெற்றுள்ளது. அக்னி சீரிஸின் இந்த மூன்றாவது மாடலும் கூட ப்ளோட்வேர் இல்லாத யுஐ உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது: அதில் OIS ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 3x ஜூம் ஆதரவு உடனான 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








