Home
Mobile

மொத்தமா பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.14,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதால், விலை குறைப்பு போக பேங்க் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் டூயல் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் 4என்எம் சிப்செட் கொண்ட இந்த லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மார்கெட் வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.24,999ஆகவும் இருக்கிறது. ஆனால், லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதால், ரூ.6,000 நேரடி விலை குறைப்பு போக கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.16,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

மொத்தமா பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.14,999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. மாடல்?

இதுபோக அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியும் போக ரூ.14,999 பட்ஜெட்டில் இந்த லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். அதேபோல ரூ.4,000 விலை குறைப்பு மற்றும் ரூ.2,000 உடனடி தள்ளுபடி போக ரூ.18,999 பட்ஜெட்டில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது.

லாவா அக்னி 3 5ஜி அம்சங்கள் (Lava Agni 3 5G Specifications): மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் (Octa Core 4nm MediaTek Dimensity 7300X) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறலாம்.

அதேபோல 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்படுகிறது. இந்த லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 8 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், 429 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்கள் கிடைக்கிறது. ரியரில் 1.74 இன்ச் (336 x 480 பிக்சல்கள்) 2டி அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 336 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் சோனி குவாட்-பேயர் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா (ஓஐஎஸ்) கிடைக்கிறது.

3X ஆப்டிகல் ஜூம் மற்றும் 30X டிஜிட்டல் ஜூம் கொண்ட 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஈஐஎஸ் டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. செல்பீ கேமராவில் சாம்சங் சென்சார் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

மேலும், ஸ்கிரீன் ஃபிளாஷ் உள்ளது. எச்டிஆர், நைட் மோட், போர்ட்ராய்டு மோட், பியூட்டி மோட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த லாவா அக்னி 3 5ஜி 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி பிரிஸ்டின் கிளாஸ் (Pristine Glass) மற்றும் ஹெதர் கிளாக் (Heather Glass) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Agni 3 5G With 50MP Camera Available Under Rs 15000 Ahead Of Lava Agni 4 Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X