இந்தியாவே வெயிட்டிங்.. ரூ.20000 விலை.. 2 டிஸ்பிளேவுடன் Lava Agni 3 அறிமுகமா? தேதி இதான்.. விலை இதனா? என்ன விலை
லாவா (Lava) நிறுவனம் இந்தியாவில் அதன் சக்தி வாய்ந்த அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது. லாவா நிறுவனம் வரும் அக்டோபர் 4, 2024 ஆம் தேதி, இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான லாவா அக்னி 3 (Lava Agni 3) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சாதனத்தின் அறிமுகத்திற்கு முன்பாகவே இதில், என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்? என்ற விபரங்கள் இதோ.
இதற்கு முன்பு லாவா நிறுவனம் அறிமுகம் செய்த லாவா அக்னி 2 (Lava Agni 2) ஸ்மார்ட்போனில் இருந்து இது எப்படி மேம்பாடுள்ளது என்பது போன்ற விபரங்களை தெரிந்துகொள்ளலாம். லாவா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டீஸர் தகவலில் நிறுவனம் அதன் அடுத்த புதுவரவன லாவா அக்னி 3 (Lava Agni 3) ஸ்மார்ட்போன் மாடலை வரும் அக்டோபர் 4, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்யுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லாவா அக்னி 3 இந்தியாவில் அறிமுகம்.. அறிமுக தேதி இதானா? (Lava Agni 3 Launching In India Launch Date Details):
இந்த புதிய போனின் டீஸர் தகவலை நிறுவனம் இப்பொது ரூல் பிரேக்கர் (Rule breaker) என்ற டேக் உடன் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய லாவா அக்னி 3 (Lava Agni 3) ஸ்மார்ட்போனை நிறுவனம் ரூ. 20,000 விலை வரம்பில் இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் இந்த புதிய லாவா அக்னி 3 (Lava Agni 3) என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்ற விபரங்கள் இதோ.
லாவா அக்னி 3 சிறப்பம்சம் (Lava Agni 3 Specifications):
லாவா அக்னி 3 (Lava Agni 3) ஸ்மார்ட்போனில் நாம் 6.78" இன்ச் அளவு கொண்ட முழு HD+ டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவர வாய்ப்புள்ளதென்று கூறப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு லாவா நிறுவனம் அதன் லாவா அக்னி 2 சாதனத்தில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை வழங்கியது என்பது குறிப்பிடதக்கது.
இத்துடன் லாவா அக்னி 3 போனில் இரண்டாவது சிறிய டிஸ்பிளே ரியர் பேனலில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், லாவா அக்னி 3 (Lava Agni 3) சாதனம் குவாட் ரியர் கேமரா அமைப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் லாவா அக்னி 3 (Lava Agni 3) சாதனம் 64MP + 8MP + 2MP + 2MP கேமரா சென்சார்களை அடக்கியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ரூ.20000 விலை.. 2 டிஸ்பிளேவுடன் Lava Agni 3 அறிமுகமா?
இந்த புதிய லாவா அக்னி 3 (Lava Agni 3) ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8GB ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் வரை இடம்பெற வாய்ப்பு அதிகம். குறிப்பாக, ரேம் பூஸ்ட் ஆதரவுடன் இந்த சாதனம் 16GB ரேம் சேவையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போன் 5000mAh உடன் 66W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெரும்.
அதிகம் எதிர்பார்க்கப்படும் லாவா அக்னி 3 (Lava Agni 3) ஸ்மார்ட்போன் சாதனமானது ஆண்ட்ராய்டு 14 உடன் லாவா சாப்ட்வேர் உடன் வெளிவருமென்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவொரு பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனமாக அக்டோபர் 4ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








