இறங்கி அடித்த Lava.. சோனி கேமரா.. 66W சார்ஜிங்.. அறிமுகமானது புதிய 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?
இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த புதிய போன் 1.5கே அமோலெட் டூயல் டிஸ்பிளே, டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது லாவா அக்னி 3 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
லாவா அக்னி 3 5ஜி அம்சங்கள் ( Lava Agni 3 5G Specifications): 6.78-இன்ச் 1.கே 3டி கர்வ்டு அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளே உடன் இந்த லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. அதேபோல் 1.74-இன்ச் கொண்ட சிறிய அமோலெட் டிஸ்பிளேவும் இதில் உள்ளது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எஸ் 4என்எம் (Dimensity 7300X 4nm ) சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் +256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் லாவா அக்னி 3 5ஜி விற்பனைக்கு வரும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெலிபோட்டோ கேமரா (30x டிஜிட்டல் ஜூம்) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 16எம்பி (சாம்சங சென்சார் ) செல்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா அக்னி 3 5ஜி போன்..
5000mAh பேட்டரி உடன் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி எஸ்ஏஃஎன்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6இ 802.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6E 802.11 ax), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), பெய்டோ (Beidou), ஜிபிஎஸ் (GPS), க்ளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன்.

சார்ஜர் இல்லாத 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட லாவா அக்னி 3 5ஜி போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.24,999-ஆக உள்ளது. சார்ஜர் உடன் கூடிய 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.22,999-க்கு வாங்க கிடைக்கும். பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
வரும் அக்டோபர் 9-ம் தேதி அசேமான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








