சைனீஸ் போன்களை சிதறவிடும் விலை.. LAVA-வின் புதிய 5G போன்.. 50MP OIS கேமரா, 120Hz டிஸ்பிளேனு அசத்தலா இருக்கு!
Lava Agni 3 5G Launch: இந்திய மொபைல் சந்தையை ஆதிக்கம் செய்யும் சீன நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில், இந்திய பிராண்ட் ஆன லாவா இன்னொரு தரமான 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்கி.. சைனீஸ் போன்களுக்கு டஃப் கொடுக்க உள்ளது. அது லாவா அகினி 3 5ஜி ஸ்மார்ட்போனாகும். வருகிற அக்.4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை (Lava Agni 3 5G Launch Date) அறிவிக்கும் டீசர் வழியாக, இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் வடிவமைப்பு மற்றும் கேமரா விவரங்களை வெளிப்படுத்தபட்டுள்ளன. அதன்படி லாவாவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 2 கலர் ஆப்ஷன்களில் வரும்.

இதன் பேக் பேனலில் 50 மெகாபிக்சல் ரியர் கேமரா செட்டப் (50MP Rear Camera Setup) இருக்கும். இதன் கேமரா ஐலேண்டில் "50MP OIS" என்கிற டெக்ஸ்டையும் பார்க்க முடிகிறது. ஆக இந்த ஸ்மார்ட்போனின் ப்ரைமரி சென்சார் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் (Optical image stabilisation support) வரும்.
எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் (6.78-inch full-HD display) வரலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் இரண்டாம் நிலை டிஸ்பிளே (Secondary display) இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக்கின் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) கொண்டு இயங்கும் என ஊகிக்கப்படுகிறது.
மீதமுள்ள அம்சங்கள் அக்டோபர் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது பகிரப்படும். இதற்கான வெளியீட்டு நிகழ்வானது, லாவாவின் யூட்யூப் சேனல் (YouTube Channel) வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
லாவா அக்னி 3 5ஜி என்ன விலைக்கு (Lava Agni 3 5G Price) வரும்? பெரும்பாலும் அக்னி 3 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.25,000 க்குள் தான் இருக்கும். இன்னும் சரியாக சொல்லப்போனால் இது ரூ.24,990 க்கு அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் லாவா அக்னி 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, குவாட் ரியர் கேமரா செட்டப் (Quad Rear Camera Setup), அதில் 50எம்பி ப்ரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் ஆட்டோஃபோகஸ் உடனான டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ப்ராசஸர் (MediaTek Dimensity 7050 SoC) கொண்டு இயங்கும் லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி வழக்கமான ரேம் மற்றும் 8ஜிபி விர்ச்சுவல் ரேம் (8GB Virtual RAM) உடன் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 4700எம்ஏஎச் பேட்டரியை (4700mAh Battery) கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








