மட்ட ரேட்டுங்க.. ரூ.14,999-க்கு 2 அமோலெட் டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் லாவா அக்னி 4 5ஜி (Lava Agni 4 5G) ஸ்மார்ட்போன் அறிமுகமானதை அடுத்து முன்னதாக 2 டிஸ்பிளேவுடன் வெளியாகிய லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. அமேசான் தளத்தில் விலை குறைப்பு போக பேங்க் தள்ளுபடியும் கிடைக்கிறது. ஓஐஎஸ் கேமரா, 5000mAh பேட்டரி, 66W போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் தளத்தில் ரூ.6,000 நேரடி விலை குறைப்பு போக ரூ.16,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. மேலும், பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.16,050 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

இது அக்னி சீரிஸில் முந்தைய மாடலாக இருந்தாலும், டூயல் அமோலெட் டிஸ்பிளே கொடுக்கிறது. அதாவது, முன்பக்கம் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மட்டுமல்லாமல், பேக்கில் மினி அமோலெட் டிஸ்பிளே கொடுக்கிறது. இந்த டிசைனில் பிரிஸ்டின் கிளாஸ் (Pristine Glass) மற்றும் ஹெதர் கிளாஸ் (Heather Glass) ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.
லாவா அக்னி 3 5ஜி அம்சங்கள் (Lava Agni 3 5G Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 429 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. 1.74 இன்ச் (336 x 480 பிக்சல்கள்) மினி டிஸ்பிளே கிடைக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300X 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. மூன்று ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
5000mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் சோனி சென்சார் உள்ளது. மேலும், 3X ஆப்டிகல் ஜூம், 30X டிஜிட்டல் ஜூம், 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்படுகிறது. லாவா அக்னி 4 5ஜி பீச்சர்களை பார்க்கலாம்.
லாவா அக்னி 4 அம்சங்கள் (Lava AGNI 4 Specifications): 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்படுகிறது.
3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








