Home
Mobile

அப்படி போடு.. மீண்டும் பட்ஜெட் விலையில் 5ஜி போனை களமிறக்கும் இந்திய நிறுவனம்.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அட்டகாசமான 5ஜி போனை பட்ஜெட் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது இந்திய லாவா நிறுவனம்.

அதாவது லாவா அக்னி 2எஸ் (Lava Agni 2S) எனும் ஸ்மார்ட்போன் தான் அறிமுகம் செய்ய உள்ளது இந்தியாவைச் சேர்ந்த லாவா நிறுவனம். இணையதளத்தில் வெளியான தகவலின்படி, இந்த மாதம் இறுதியில் லாவா அக்னி 2எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லாவா அக்னி 2 போன்ற அம்சத்துடன் வெளிவரும் இந்த லாவா அக்னி 2எஸ் போன் வெளிவரும்.

மீண்டும் பட்ஜெட் விலையில் 5ஜி போனை களமிறக்கும் இந்திய நிறுவனம்..

குறிப்பாக 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த லாவா அக்னி 2எஸ் போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லாவா அக்னி 2எஸ் போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் விரைவில் இந்த போனின் அம்சங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த லாவா அக்னி 2 போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் பிராஸசர் உடன் மாலி-ஜி62 எம்சி4 ஜிபியு ஆதரவும் லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா போன். பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

மீண்டும் பட்ஜெட் விலையில் 5ஜி போனை களமிறக்கும் இந்திய நிறுவனம்..

இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த லாவா போன் வெளிவந்துள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன். தற்போது அமேசான் தளத்தில் இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Agni 2S will be launched in India later this month: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X