இன்னும் கொஞ்ச நாள் தான்.. இந்திய நிறுவனம் களமிறக்கும் புதிய 5G போன்.! அடடா அழகு அள்ளுதே.!
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் லாவா அக்னி 2 5ஜி எனும் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது லாவா நிறுவனம்.
அதாவது இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த மாதம் இறுதியில் லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் மாடலும் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கூட இந்த லாவா அக்னி 2 5ஜி போனின் புகைப்படம் இணையதளத்தில் கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது ஆன்லைனில் கசிந்த லாவா அக்னி 2 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இணையதளத்தில் கசிந்த தகவலின்படி, லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும். அதேபோல் பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன்.
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா வசதியுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் தெளிவான
புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1080 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கும் வழங்கப்பட்டுள்ள சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும்.

அதேபோல் லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.
அதன்பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக அட்டகாசமான வடிவமைப்புடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








