Home
Mobile

இந்திய நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான 5G ஸ்மார்ட்போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்கள் மற்றும் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனின் விலையும் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்திய நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான 5G ஸ்மார்ட்போன்.! என்ன விலை?

குறிப்பாக லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் பிராஸசர் உடன் மாலி-ஜி62 எம்சி4 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா போன். பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லாவா அக்னி 2 5ஜி போன் பச்சை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + டெப்த் சென்சார் + மேக்ரோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த லாவா போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக 4700 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்திய நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான 5G ஸ்மார்ட்போன்.! என்ன விலை?

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த புதிய போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.21,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் மே 24-ம் தேதி அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Agni 2 5G phone with stunning design launched in India at Rs.21999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X