சீன கம்பெனிகளின் 5ஜி போன்களை துவம்சம் செய்யும் LAVA-வின் புதிய 5ஜி போன்: அறிமுகம் எப்போது தெரியுமா?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லாவா அக்னி 5ஜி(Lava Agni 5G) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது லாவா நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டு ஒரு 5ஜி போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது லாவா நிறுவனம்.
அதாவது லாவா நிறுவனம் அடுத்த மாதம் துவக்கத்தில் புதிய லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனும் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் சீன நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் 5ஜி போன்களை சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் இந்திய நிறுவனமான லாவா 5ஜி போன்களை கம்மி விலையில் தரமான அம்சங்களுடன் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக லாவா அக்னி 5ஜி போன்றே லாவா அக்னி 2 5ஜி மாடலுக்கும் அதிக வரவேற்பு இருக்கும். மேலும் ஆன்லைனில் கசிந்த லாவா அக்னி 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும். அதேபோல் பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா வசதியுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1080 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த போனுக்கும் வழங்கப்பட்டுள்ள சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன்.

குறிப்பாக லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த லாவா அக்னி 2 5ஜி போன் மட்டும் வெளிவந்தால் சீன நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








