பட்ஜெட் விலை.. 66W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. புதிய நிறங்கள்.. அசத்தும் லாவா போன்.. எந்த மாடல்?
இந்த ஆண்டு மே மாதம் லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போன் முதலில் கிளாஸ் விரிடியன் நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் இரண்டு நிறங்களில் லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது ஹீதர் கிளாஸ் (Heather Glass) மற்றும் அயர்ன் கிளாஸ் ( Iron Glass) நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தற்போது அமேசானில் ரூ.19,999-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் இப்போது இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனின்ன அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) ஸ்மார்ட்போன். மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் பிராஸசர் உடன் மாலி-ஜி62 எம்சி4 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா போன். பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இந்த லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த லாவா போன் வெளிவந்துள்ளது.
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது . எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 66 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய லாவா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் குறைந்த எடையில் வெளிவந்துள்ளது. அதேபோல் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த
போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
மேலும் லாவா நிறுவனம் விலைவில் பல அசத்தலான 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் லாவா நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








