Home
Mobile

முக்கியமான ஒரு அம்சமின்றி ரூ.7,999/-க்கு அறிமுகமாகியுள்ள லாவா ஏ93.!

பின்புற கேமராவானது எச்டி வீடியோ பதிவு, எச்டிஆர் மற்றும் டைமர் அம்சங்களை ஆதரிக்கிறது.

By Muthuraj

இந்தியாவில் உள்ள மொபைல் போன் பிராண்ட் ஆன லாவா நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய 3ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை மிகவும் அமைதியான முறையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் லாவா ஏ93 என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ 7,999/- என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ லாவா வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள லாவா ஏ93 ஸ்மார்ட்போன் அதன் முழுமையான குறிப்புகள் மற்றும் அம்சங்களை வெளிப்படுத்துகிறது. லாவா ஏ93 ஆனது 1280x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

2ஜிபி ரேம்

2ஜிபி ரேம்

வன்பொருள் அம்சங்களை பொறுத்தமட்டில் லாவா ஏ93 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இயல்பான நினைவக திறன் ஆகியவற்றை இணைத்து அறியப்படாத சிப்செட் ஒன்றுடன் இணைந்த 1.2ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ப்ராசசரை பயன்படுத்துகிறது. மேலும் இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டையின் உதவியுடன் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்குகிறது.

எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி

எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி

இமேஜிங் துறைக்கு வரும் போது, லாவா ஏ93 ஸ்மார்ட்போன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி பிரதான கேமரா ஸ்னாப்பர் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 2எம்பி செல்பீ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புற கேமராவானது எச்டி வீடியோ பதிவு, எச்டிஆர் மற்றும் டைமர் அம்சங்களை ஆதரிக்கிறது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்மெல்லோ

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்மெல்லோ

இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆன் இக்கருவி ஓடிஜி மற்றும் பிற பொதுவான இணைப்பு அம்சங்களை ஆதரிக்கிறது. இது தவிர, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்மெல்லோவை அடிப்படையாகக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 3000எம்ஏச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

தங்கம் மற்றும் சாம்பல்

தங்கம் மற்றும் சாம்பல்

ரூ.7,999/- என்ற விலை நிர்ணயம் கொண்ட இந்த லாவா ஏ93 ஸ்மார்ட்போன் ஆண்டு இரண்டு நிற வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது - தங்கம் மற்றும் சாம்பல். இது ப்ளிப் டூ ம்யூட் போன்ற சைகை ஆதரவுடன் வருகிறது.

பிரதான எதிர்மறை

பிரதான எதிர்மறை

இருப்பினும், லாவா ஏ93 சாதனத்தில் பிரதான எதிர்மறை ஒன்றும் உள்ளது அதாவது இக்கருவியில் 4ஜி எல்டிஇ ஆதரவு இல்லை. 4ஜி என்பது ஒரு நிலையான அம்சமாக மாறியுள்ள நிலைப்பாட்டில் இதுவே ஒருபின்னடைவாக உள்ளது.

கடுமையான போட்டி

கடுமையான போட்டி

மறுகையில் இந்திய சந்தையில் 4ஜி வோல்ட் உடன் பல பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மிகவும் விலையுயர்ந்த குறிப்பேட்டில் உள்ளன என்பதால் இது பலரை கவர்ந்திழுக்கும் என்று நம்பலாம். இருப்பினும் இதே விலை நிர்ணயத்தில் உள்ள சியோமி ரெட்மீ 4 மற்றும் ரெட்மீ 4ஏ போன்ற சிறந்த விற்பனையாளர்களிடமிருந்து கடுமையான போட்டியைப் பெறும் என்பதும் தெளிவாகிறது.

Best Mobiles in India

English summary
Lava A93 launched at Rs. 7,999 without a vital feature. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X