Home
Mobile

மலிவு விலையில் பீச்சர் போன் அறிமுகம்: என்னென்ன அம்சங்கள்.!

லாவா நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் லாவா ஏ5 பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பேட்டரி வசதி மற்றும் நீண்டநாள் உழைக்கக் கூடிய வகையில் சிப்செட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 16

ஜனவரி 16

மேலும் லாவா நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய சாதனம் வரும் ஜனவரி 16-ம் தேதி முதல் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்திற்கான லாவா ஏ5 பெருமையுடன் அறிமுகம்
செய்யப்படுகிறது என்றும், இந்த சாதனத்தில் நமது தேசியகொடி வண்ணம் இடம்பெற்றுள்ளது என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2.4-இன்ச் டிஸ்ப்ளே

2.4-இன்ச் டிஸ்ப்ளே

இந்த லாவா ஏ5 சாதனம் ஆனது 2.4-இன்ச் கியூவிஜிஏ டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்தபாதுகாப்பு அம்சம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தில் இரட்டை சிம் ஆதரவு உள்ளது.

 1000எம்ஏஎச் பேட்டரி

1000எம்ஏஎச் பேட்டரி

லாவா ஏ5 பீச்சர் போன் மாடலில் 1000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே மூன்று நாட்கள் வரை பேட்டரிகுறையாமல் இந்த பீச்சர் போனை பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

7 மொழிகளில் தட்டச்சு

7 மொழிகளில் தட்டச்சு

லாவா ஏ5 பீச்சர் போன் சாதனத்தில் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, எனவே உங்களுக்கு பிடித்தப்பாடல்கள் அனைத்தையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 22 மொழிகளில் உள்வரும் நூல்களை ஆதரிப்பதற்கும் இது பொருத்தப்பட்டிருக்கிறது, மேலும் பயனர்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 7 மொழிகளில் தட்டச்சு செய்ய உதவுகிறது.

 ரூ.1449-விலை

ரூ.1449-விலை

இந்த பீச்சர் போன் சாதனத்தில் ஜூம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் அம்சத்துடன் முதன்மை கேமராவும் இடம்பெற்றுள்ளது, இதுதவிர இன்ஸ்டன்ட் டார்ச், வயர்லெஸ் எஃப்எம் வித் ரெக்கார்டிங், யூ.எஸ்.பி கனெக்டிவிட்டி மற்றும் புளூடூத் போன்ற கூடுதல் அம்சங்களும் உள்ளன.குறிப்பாக இந்த சாதனம் ரூ.1449-விலையில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Lava A5 Special Limited Edition launched for Rs 1449 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X