Home
Mobile

OnePlus-க்கு ஒரு கும்பிடு.. அதோட புது 5G போனுக்கு ஒரு கும்பிடு.. வெறும் 1 மாசம் தான் ஆகுது.. அதுக்குள்ள?

இப்போது தான் புரிகிறது, ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஏன் புதிதாக ஒரு என் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது என்று! முற்றிலும் புதிய ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 30 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது ரூ.20000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த மே மாத தொடக்கத்தில் ரூ.20,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை விட மலிவான விலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus-க்கு ஒரு கும்பிடு.. அதோட புது 5G போனுக்கு ஒரு கும்பிடு!

இந்த விலை நிர்ணயம் பட்ஜெட் வாசிகள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. ஏனென்றால் ரூ.20,000 க்குள் என்கிற பிரிவின் கீழ் ஒன்பிளஸ் என்கிற பெரிய பிராண்ட் நுழைவது, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை அனைவரும் அணுக கூடியதாக மாற்றும். இதற்கிடையில் தன - இந்த பக்கம் கொடுத்து விட்டு அந்த பக்கம் வாங்குவது போல, ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு வேலையை பார்த்துள்ளது

கடந்த மே 7 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் நார்ட் சிஇ 6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோஎரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

பின்னர் இவைகள் முறையே ரூ.22,999, ரூ.25,999 மற்றும் ரூ.28,999 ஆகவும் விலை உயர்த்தப்பட்டன. இப்போது இரண்டாவது முறையாக; மீண்டும் விலை உயர்த்தப்பட்டு உள்ளன. சமீபத்திய விலை உயர்விற்கு பின்னர் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.25,999 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.27,999 ஆகவும் மற்றும் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.30,999 ஆகவும் உயர்ந்துள்ளது. அதாவது ரூ.20000-க்கு நெருக்கமான பட்ஜெட்டில், 1 மாதத்திற்கு முன் அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இப்போது ரூ.30,000 பட்ஜெட்டை தொட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் விரிவான அம்சங்கள்:
- 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 6.72-இன்ச் ஃபுல்-எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே
- 1,000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 240Hz வரையிலான டச் சாம்பிளிங் ரேட்
- 392 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 91.4 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் IP64 ரேட்டிங்
- MIL-STD-810H சான்றிதழ்

- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அப்பெக்ஸ் எஸ்ஓசி
- ஏஆர்எம் மாலி-ஜி615 ஜிபியு
- UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் LPDDR4X ரேம்
- 21,683 சதுர மிமீ விசி கூலிங் சிஸ்டம்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2.88-இன்ச் ஓம்னிவிஷன் OV50D40 சென்சார் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 2-மெகாபிக்சல் (எப்/2.4) இரண்டாம் நிலை கேமரா
- 89-டிகிரி பீல் ஆப் வியூ மற்றும் 10எக்ஸ் வரையிலான டிஜிட்டல் ஜூம்
- 4K/30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்
- 8-மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா

- 7,000mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்
- 5ஜி, 4ஜி LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4
- ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட், GPS, GLONASS, BDS, Galileo மற்றும் QZSS
- ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்

Best Mobiles in India

English summary
Launched For Rs 20999 in May OnePlus Nord CE 6 Lite 5G Gets Second Price Hike Now Selling For Rs 25999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X