1ஜிகா ஹெர்ட்ஸ் பிராசஸருடன் நோக்கியா மொபைல்போன்கள்

Posted By: Staff

1ஜிகா ஹெர்ட்ஸ் பிராசஸருடன் நோக்கியா மொபைல்போன்கள்
டெல்லி: அடுத்தபடியாக 1 ஜிகா ஹெர்ட்ஸ் இன்பில்ட் பிராசஸர் கொண்ட புதிதாக 4 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய நோக்கியா திட்டமிட்டுள்ளது.

இந்த போன்களின் மூலம் சந்தையில் தனது இடத்தை வலுவாக்கிக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் நம்புகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நோக்கியா அறிவித்ததும் சிம்பையான் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அந்த நிறுவனம் கைவிடும் என்று எதுிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவற்றை பொய்யாக்கும் விதமாக 1 ஜிகா ஹெர்ட்ஸ் + சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்களை நோக்கியா விரைவில் களமிறக்குகிறது.

நோக்கியா, 701 - ஹெலன், நோக்கியா 700- ஸீட்டா, நோக்கியா 600 சிண்டி, நோக்கியா 500 ஃபேட் ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்களும்தான் நோக்கியாவின் அடுத்த அறிமுக பட்டியலில் காத்திருக்கிறது.

இதில், ஹெலன் மற்றும் சீட்டா ஸ்மார்ட்போன்கள் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் + சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய வெர்ஷன் பெல்லியுடன் வருகிறது.

இந்த இரண்டு போன்களும் ஓவி 8.1 இன்டர்நெட் பிரவுசருடன் வருவதால், அதிவேக இன்டர்நெட் இணைப்பை பெற முடியும்.

இதற்கடுத்து, சிண்டி மற்றும் ஃபேட். இந்த போன்கள் சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த போன்கள் நோக்கியா எஸ்-40 ஸ்மார்ட்போன்கள் போன்று 1 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசஸருடன் வர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அடுத்து சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நோக்கியா அறிமுகப்படுத்தியது.

இதையடுத்து, சிம்பையான் அன்னா ஓஸ்சை விட சக்திவாய்ந்த பெல்லி ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படு்த்துகிறது நோக்கியா.

தவிர, எதிர்காலத்தில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் ஆற்றல்மிக்க ஸ்மார்ட்போன்களை களமிறக்கவும் நோக்கியா திட்டமி்டடுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்