அசத்தலான சியோமி ரெட்மீ நோட் 5 டீசர் வெளியானது.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம் இந்த வருடம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் தற்சமயம் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரெட்மீ நோட் 5 டீசர் வெளியானது, இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிப்ரவரி 14-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். மேலும் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் 18:9 என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது.
இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுளளது.

சியோமி ரெட்மீ நோட் 5:
சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கைரேகை ஸ்கேனர்:
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் ரியர் கேமராஇ அதற்கு கீழே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் புதிய டீசர் வீடியோவை கீழே காணலாம்.

கேமரா :
ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் 16எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

உள்ளடக்க மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


இணைப்பு ஆதரவுகள் :
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
குவால்காம்:
சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் 4000 எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications