சாம்சங் நிறுவனம் கொடுக்கும் இரண்டு பெரிய சர்ப்ரைஸ் & ஒரு மினி ஷாக்.!

வெளியான தகவலின்படி, கேலக்ஸி எஸ்9 கருவியில் கைரேகை ஸ்கேனர் அம்சமானது அதன் பின்புற கேமராவின் கீழ் ஒரு புதிய நிலையைப் பெறும்.

|

சாம்சங் நிறுவனம், அதன் தலைமை ஸ்மார்ட்போன்களின் பின்புற கைரேகை சென்சார் அம்சத்திற்கான நிலையான இடத்தை பற்றி இன்னும் கவலைப்பட்டு கொண்டிருப்பது போல தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் கொடுக்கும் இரண்டு பெரிய சர்ப்ரைஸ் & ஒரு மினி ஷாக்.!

நிறுவனத்தின் எஸ் ஹெல்த் ஆப்பின் புதிய லீக்ஸ் ஸ்கிரீன் ஷாட் உண்மை என்றால், வரவிருக்கும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார் ஒரு நம்பமுடியாத இடத்தில பொறிக்கப்படவுள்ளது. வெளியான தகவலின்படி, கேலக்ஸி எஸ்9 கருவியில் கைரேகை ஸ்கேனர் அம்சமானது அதன் பின்புற கேமராவின் கீழ் ஒரு புதிய நிலையைப் பெறும்.

இதய துடிப்பு சென்சார் திரை

இதய துடிப்பு சென்சார் திரை

வெளியான ஸ்க்ரீன்ஷார்ட் ஆனது எஸ் ஆப் வழியான இதய துடிப்பு சென்சார் திரையை காட்டுகிறது. அதில் இடம்பெறும் கேலக்ஸி ஸ்மார்ட்போனின் வரைபடமானது, முன்னர் கூறப்பட்டபடி ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டிருக்காமல் சிங்கிள் ரியர் கேமரா அமைப்பை வெளிப்படுத்துகிறது.

மினி கேலக்ஸி எஸ்9

மினி கேலக்ஸி எஸ்9

இந்த இடத்தில பல நம்பகத்தன்மை சார்ந்த கேள்விகள் எழுகின்றன. மறுபக்கம் சாமொபைல் தளமோ "இது ஒரு சுவாரஸ்யமான சாத்தியம்" என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த வடிவமைப்பு உண்மையாகும் என்று நம்புகிறது. ஸ்கிரீன்ஷாட்டில் காணப்படும் தொலைபேசியானது - முன்னர் லீக்ஸ் தகவலில் சிக்கிய - மினி கேலக்ஸி எஸ்9 ஆகவும் வாய்ப்புள்ளது.

புறக்கணிக்க முடியாது

புறக்கணிக்க முடியாது

இரட்டை கேமராக்கள் என்னது பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு பிரதான அம்சமாகி விட்டதால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் உடன் நேரடி போட்டி நிகழ்த்தும் நோக்கத்தில் உருவாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 அல்லது கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனில் டூயல் கேம் அம்சத்தினை புறக்கணிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 இன்ச் அளவிலான டிஸ்பிளே

4 இன்ச் அளவிலான டிஸ்பிளே

கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், அடுத்த தலைமுறை கருவிகளான சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், 4 இன்ச் அளவிலான டிஸ்பிளே கொண்ட எஸ்9 மினி ஸ்மார்ட்போனும் வெளியாகலாமென கூறப்படுகிறது.

5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம்

5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம்

கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனின் வன்பொருள் அம்சங்கள் பற்றிய எந்த விவரங்களையும் தற்போது கணிக்கமுடியாத அளவிற்கு இருப்பினும், தொலைபேசி வட்டமான அல்லது வளைந்த விளிம்புகளுடன் 5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம் என்பது உறுதி.!

தக்கவைத்துக்கொள்ளும்

தக்கவைத்துக்கொள்ளும்

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே இடம்பெறாவிட்டாலும் கூட ஒரு அசாதாரணமான 18.5: 9 என்ற திரை விகிதத்தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்த மினி ஸ்மார்ட்போன் தவிர்த்து, அடுத்த ஆண்டு வெளியாகும் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள்கே தற்போதைய கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ கருவிகளின் இன்பினிட்டி டிஸ்பிளே மற்றும் திரை அளவை) தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேடிக்கையான போட்டி

வேடிக்கையான போட்டி

இந்த காரணத்தினால் தான் சாம்சங் நிறுவனம், சிறிய அளவிலான மொபைல்களை விரும்பும் மக்களுக்காக ஒரு மினி பதிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூறப்படும் மினி கேலக்ஸி எஸ்9 ஆனது ஐபோன்களின் அளவில் வெளியாகும் மறுகையில், 2018-ஆம் ஆண்டில் வெளியாகும் ஐபோன்கள், சாம்சங் கருவிகளை போன்ற 6 இன்ச் அளவில் வெளியாகலாம் என்ற தகவல் நேற்று வெளியானது. இதுவொரு வேடிக்கையான போட்டியாக காணப்படுகிறது.

நிச்சயமாக கூற முடியாது

நிச்சயமாக கூற முடியாது

திரை அளவுகளில் ஒற்றுப்போனாலும், கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆனது அதன் முந்தைய கருவிகளுடன் வன்பொருள் துறையடன் ஒற்றுப்போக அதிக வாய்ப்பில்லை. ஆக, நிச்சயமாக மினி பதிப்பு ஒன்று வெளியாகுமென கூற முடியாது. கடந்த காலங்களில் கூட சாம்சங் அதன் பிரதான தொலைபேசிகளின் மினி பதிப்பு அறிமுகப்படுத்தலாம் என்ற வதந்திகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்8 மினி பதிப்பு

கேலக்ஸி எஸ்8 மினி பதிப்பு

இதேபோன்றதொரு மினி பதிப்பு கேலக்ஸி எஸ்8 உடன் இணைந்து வெளியாகும் என்று வதந்திகள் வெளியாகின. அவ்வளவு ஏன்.? முன்பு கேவெளியான கேலக்ஸி எஸ்7 உடன் இணைந்தும் ஒரு மினி பதிப்பு வெளியாகுமென வதந்திகள் தெரிவித்தன. ஆக இந்த குறிப்பிட்ட தகவலை, உப்பின் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

6.2 அங்குல திரை மற்றும் 6 ஜிபி ரேம்

6.2 அங்குல திரை மற்றும் 6 ஜிபி ரேம்

கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், அது 6.2 அங்குல திரை மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டு வரலாம். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஆனது, ஒரு 5.8 அங்குல காட்சி மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 845 சிபியூ

ஸ்னாப்டிராகன் 845 சிபியூ

கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் உலகளாவிய பதிப்பானது நிறுவனத்தின் புதிய எக்ஸிநோஸ் 9 தொடர் 9810 செயலி உடனான ஸ்னாப்டிராகன் 845 சிபியூ கொண்டு இயங்கலாம். மேலும் இரண்டு தொலைபேசிகளுமே பிக்ஸ்பை ஏஐ பொத்தான் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் இடம்பெறுமென்றும் ஊகிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Latest Samsung Galaxy S9 leak reveals new position for fingerprint sensor? Read more about this in Tamil Gizot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X