அதிரடியாக ரெடி.! முற்றிலும் புதிய டிசைனில் சியோமி ரெட்மீ நோட் 5.!

|

சியோமி நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்த 2018 காலாண்டில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அடுத்த டாப் செல்லிங் (சிறந்த விற்பனையாகும்) ஸ்மார்ட்போன் ஆக ரெட்மீ நோட் 5 திழுமா என்ற கேள்விக்கு அவ்வப்போது வெளியாகும் லீக்ஸ் தகவல்கள் "ஆம்" என்கிற பதிலையே உரக்கச்சொல்கின்றன.

அதிரடியாக ரெடி.! முற்றிலும் புதிய டிசைனில் சியோமி ரெட்மீ நோட் 5.!

அதை மென்மேலும் வலுப்படுத்தும் வண்ணம் ஒரு புதிய ரெண்டர் தற்போது இணையத்தில் உலா வருகிறது, அந்த தகவல் மிகவும் உண்மையான ஸ்மார்ட்போனை வெளிப்படுத்துவது போல தெரிகிறது. குறிப்பாக வெளியான படத்தில் காட்சிப்படும் ரெட்மீ நோட் 5 ஆனது மிகவும் மெல்லிய முன்பக்க பெஸல்களை கொண்டுள்ளதையும், முற்றிலும் மாறுபட்ட புதிய பின்புற வடிவமைப்பை கொண்டுள்ளதையும் காணமுடிகிறது.

முற்றிலும் புதிய வடிவமைப்பை காட்டுகிறது

முற்றிலும் புதிய வடிவமைப்பை காட்டுகிறது

முன்னர் வெளியான ரெட்மீ நோட் 5 லீக்ஸ் புகைப்படங்கள் ஆனது அதன் முன்னோடியான ரெட்மீ நோட் 4 போன்றே ஒரு வடிவமைப்பை காட்டியது. அனால் சமீத்திய புகைப்படமானது முற்றிலும் புதிய வடிவமைப்பை காட்டுகிறது. எனவே ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் திரைகளை பொத்தான்களை நிச்சயமாக எதிர்பார்க்க வேண்டாம்.

ஆன்-ஸ்க்ரீன் பொத்தான்

ஆன்-ஸ்க்ரீன் பொத்தான்

ஏனெனில், ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா, சென்சார்கள் மற்றும் முதன்மை மைக்ரோஃபோன் ஆகியவற்றின் மேல் பெஸல்லெஸ் வடிவமைப்பு இடம்பெறுள்ளது. இதன் அர்த்தம் சியோமி அதன் முந்தைய 18: 9 டிஸ்பிளே கொண்ட மி மிக்ஸ் 2 மற்றும் ரெட்மீ 5 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளதை போல ஆன்-ஸ்க்ரீன் பொத்தான்களை அமைத்துள்ளது

கேமரா தொகுதிக்கு கீழே கைரேகை ஸ்கேனர்

கேமரா தொகுதிக்கு கீழே கைரேகை ஸ்கேனர்

தொலைபேசியின் பின்புறத்தில், ஒரு பிரத்யேக தொகுதியில் இரட்டை கேமரா அமைக்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா தொகுதிக்கு கீழே, நாம் ஒரு கைரேகை ஸ்கேனரை பார்க்கமுடிகிறது. அதாவது, முந்தைய இரண்டு ரெட்மீ நோட் ஸ்மார்ட்போன்களில் காணப்பட்ட அதே நிலையில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பொதிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி 7 ஆக இருக்கலாம்.?

சியோமி மி 7 ஆக இருக்கலாம்.?

ஒரு பக்கம் இந்த லீக்ஸ் புகைப்படமானது மிகவும் நன்றாக இருக்கிறது, மறுபக்கம் முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு கொண்டுள்ள இக்கருவி ரெட்மீ நோட் 5 அல்ல, சியோமி மி 7 ஆகவோ அல்லது முற்றிலும் வேறுபட்ட ஒரு சியோமி ஸ்மார்ட்போனாக இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தியாவின் 'பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்'

இந்தியாவின் 'பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்'

சிவமும் மி 7 ஆனது அதன் பின்பக்கத்தில் ஒரு கண்ணாடி மீவடிவமைப்பு கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுவதால் இது ரெட்மீ நோட் 5 ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது. மற்றும் கூறப்படும் இதே வடிவமைப்பில் ரெட்மீ நோட் 5 வெளியானால் நிச்சயமாக இந்தியாவின் 'பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்' பட்டியலில் இக்கருவி இடம்பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

5.99 அங்குல முழு எச்டி + டிஸ்பிளே

5.99 அங்குல முழு எச்டி + டிஸ்பிளே

ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தமட்டில், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஒசி கொண்டு வெளியாகலாம். மேலும் இக்கருவி ஒரு 5.99 அங்குல முழு எச்டி + டிஸ்பிளே மற்றும் இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் செல்பீக்கள், வீடியோ அழைப்புகளுக்கான ஒற்றை செல்பீ கேமரா கொண்டிருக்கும்.

நீண்ட காத்திருப்புக்கு ஒரு நியாமான காரணம் இருக்கும்

நீண்ட காத்திருப்புக்கு ஒரு நியாமான காரணம் இருக்கும்

சியோமி நிறுவனம் ஒரு புதிய ரெட்மீ நோட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது மற்றும் இந்த நீண்ட காத்திருப்புக்கு ஒரு நியாமான காரணம் இருக்குமென்று நம்பலாம். வெளியான லீக்ஸ் வடிவமைப்பில், ஒரு மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் ரெட்மீ நோட் 5 வெளியானால் சந்தையில் கிடைக்கும் இதர அனைத்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்களையும் இது கொல்லும் என்பது உறுதி.

Best Mobiles in India

English summary
Latest Render of Xiaomi Redmi Note 5 Shows Small Bezels on the Front and New Rear Camera Design. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X