அறிமுகம் ஆனதுமே ரூ.7000 ஆபர்! இந்த Realme போனை கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!

|

ரியல்மி (Realme) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனான ரியல்மி ஜிடி நியோ 3டி (Realme GT Neo 3T) இன்று (அதாவது செப்டம்பர் 16) இந்தியாவில் அறிமுகமானது.

அறிமுகமான வேகத்திலேயே ரூ.7,000 என்கிற தள்ளுபடியை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன?

எப்போது முதல் விற்பனைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பெரிய மற்றும் 120Hz டிஸ்பிளே!

பெரிய மற்றும் 120Hz டிஸ்பிளே!

டூயல்-சிம் ஆதரவு கொண்ட ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த Realme UI 3.0 கொண்டு இயங்குகிறது.

இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.62-இன்ச் அளவிலான Full-HD+ (1,080x2,400 பிக்சல்ஸ்) E4 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இதன் டிஸ்ப்ளே 1,300 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸை வழங்குகிறது மற்றும் HDR10+ ஆதரவையும் பேக் செய்கிறது!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

லேட்டஸ்ட் 5G சிப்செட்!

லேட்டஸ்ட் 5G சிப்செட்!

Realme நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC உடன் 8GB வரையிலான LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவொரு 5G போன் ஆகும்!

அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போன் டைனமிக் ரேம் எக்ஸ்பான்ஷன் டெக்னாலஜி (Dynamic RAM Expansion Technology) உடனும் வருகிறது.

இது "மென்மையான செயல்பாடுகளுக்காக" இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து கூடுதலாக 5ஜிபி ரேம்-ஐ கடன் வாங்கும் ஒரு அம்சம் ஆகும்.

கேமிங்கின் போது ஒரு குறையும் இருக்காது!

கேமிங்கின் போது ஒரு குறையும் இருக்காது!

ஏனென்றால், ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம் பிளஸ் (Stainless Steel Vapor Cooling System Plus) உள்ளது.

இது வெப்பத்தை திறம்படச் சிதறடிக்க, டயமண்ட் தெர்மல் ஜெல்லுடன் (Diamond thermal gel) கூடிய எட்டு குளிரூட்டும் அடுக்குகளை (Cooling layers) கொண்டுள்ளது.

விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

கேமரா செட்டப் எப்படி?

கேமரா செட்டப் எப்படி?

ரியல்மி GT நியோ 3T ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

அதில் 64எம்பி மெயின் கேமரா + 119 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ உடனான 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது.

முன்பக்கத்தில், 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

விலையை மீறிய பாஸ்ட் சார்ஜிங்!

விலையை மீறிய பாஸ்ட் சார்ஜிங்!

256ஜிபி அளவிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த Realme ஸ்மார்ட்போன் ஆனது 80W SuperDart சார்ஜிங் ஆதரவுடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.7000 என்கிற அறிமுக சலுகையை வைத்து பார்க்கும் போது, இதன் 80W சார்ஜிங் ஆனது "விலையை மீறிய ஒரு அம்சம்" ஆகும்!

கூடுதலாக, இது Dolby Atmos உடனான டூயல் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

சீனாவின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனிமேல் தான் உண்மையான ஆட்டமே இருக்கு!சீனாவின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனிமேல் தான் உண்மையான ஆட்டமே இருக்கு!

Realme GT Neo 3T விலை மற்றும் விற்பனை:

Realme GT Neo 3T விலை மற்றும் விற்பனை:

இந்தியாவில் Realme GT Neo 3T ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும்.

மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.31,999 க்கும் மற்றும் டாப் எண்ட் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.33,999 க்கும் வாங்க கிடைக்கும்.

எப்போது முதல் விற்பனை?

எப்போது முதல் விற்பனை?

ரியல்மி GT Neo 3T-யின் முதல் விற்பனை வருகிற செப்டம்பர் 23, மதியம் 12 மணிக்கு (மதியம்) திட்டமிடப்பட்டுள்ளது.

இது டாஷ் யெல்லோ, டிரிஃப்டிங் ஒயிட் மற்றும் ஷேட் பிளாக் என்கிற மூன்று கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

இது Realme.com, Flipkart மற்றும் மெயின்லைன் சேனல்களின் வழியாக விற்பனைக்கு வரும்.

மேலும் Realme நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையின் போது ரூ.7,000 என்கிற தள்ளுபடி அணுக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Latest Mid Range Smartphone 2022 Realme GT Neo 3T Price in India First Sale Date Launch Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X