ரூ.12499 க்கு லேட்டஸ்ட் Infinix 5G போன்.. நம்பி வாங்க நச்சுனு 5 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 3 காரணங்கள்!
இந்தியாவில் சியோமி, விவோ, மோட்டோ ஆகிய நிறுவனங்களின் போன்களை வாங்குவதை இன்பினிக்ஸ் நிறுவனங்களின் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இன்பினிக்ஸ் நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்கின்றன.
எனவேதான் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் இந்நிறுவனம் சமீபத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 30 (Infinix Hot 30) ஸ்மார்ட்போனை இந்தியாவில் கம்மி விலையில் அறிமுகம் செய்தது. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் எப்படி இருக்கிறது என்பதையும், இதை நம்பி வாங்கலாமா? வேண்டாமா என்பதையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மேட்-பினிஷ் செய்யப்பட்ட பின்புற பேனல்-ஐ கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போன். பின்பு தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP53 சான்றிதழ் கொண்டு வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 30. அதேபோல் பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் குறைந்த எடையுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போன். ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். அதாவது ஃபுல் எச்டி வீடியோ மற்றும் கேமிங் போன்ற பயன்களுக்கு இந்த போனின் டிஸ்பிளே அருமையாகப் பயன்படும்.
அதேபோல் 2460 × 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள 50எம்பி கேமரா ஒரளவுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். ஆனால் ஏஐ லென்ஸ்-க்கு பதிலாக அல்ட்ரா வைடு கேமராவுடன் இந்த போன் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் பகல் நேரத்தில் இந்த போனின் உதவியுடன் ஒரளவுக்கு அருமையான படங்களை எடுக்க முடியும். ஆனால் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் இன்பினிக்ஸ் ஹாட் 30 கேமரா சொதப்புகிறது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இன்பினிக்ஸ் ஹாட் 30 கேமராவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 6020 எம்எச்எச் 7என்எம் பிராசஸர் (MediaTek Dimensity 6020 7nm processor)உடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6020 எம்எச்எச் 7என்எம் பிராசஸர் ஆனது கேமிங் போன்ற பயன்களுக்கு மிகவும் அருமையாகப் பயன்படும். அதேபோல் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் XOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
6000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதாவது இந்த போன் முழு பயன்பாட்டில் ஒரு நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் போன் வெளிவந்துள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த போன். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ஸடோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 30 - நிறைகள் மற்றும் குறைகள்: 6000 எம்ஏஎச் பேட்டரி, சிறந்த செயல்திறன், ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 3.5மிமீ ஆடியோ ஜாக், கம்மி விலை போன்றவை இந்த போனின் நிறைகள் ஆகும். அதேபோல் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைப்பதில் சந்தேகம், சிறப்பான கேமரா அமைப்பு இல்லை, அதிவேக பாஸ்ட் சார்ஜிங் இல்லை என்பது தான் இந்த போனின் குறைகள்.


Click it and Unblock the Notifications








