இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!

|

வியாபார தந்திரம் என்று வந்துவிட்டால் - குறிப்பாக மொபைல் போன் சந்தையில் - சீன நிறுவனங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை!

ஆகையால் தான் ஒன்பிளஸ், ஒப்போ, விவோ, ரியல்மி என கிட்டத்தட்ட அனைத்து சீன மொபைல் பிராண்டுகளுமே இந்திய மொபைல் சந்தையில் "கால் மேல் கால் போட்டு" உட்கார்ந்து இருக்கின்றன!

அந்த பட்டியலில்..!

அந்த பட்டியலில்..!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் சீன நிறுவனங்களில் சியோமி-க்கு (Xiaomi) ஒரு தனி இடமே உண்டு!

ஏனென்றால், இன்றோ நேற்றோ அல்ல, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், சியோமி நிறுவனம் இந்தியாவில் தன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.

விலையை மீறிய அம்சங்களை வழங்குவதன் வழியாக இந்தியர்களின் ஆர்வத்தை தூண்டலாம் என்கிற வியாபார தந்திரத்தை "முதல் நாளில்" இருந்தே பின்பற்றி வருகிறது!

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!

அந்த வரிசையில்.. ரூ.6,999 க்கு ஒரு ஸ்மார்ட்போன்!

அந்த வரிசையில்.. ரூ.6,999 க்கு ஒரு ஸ்மார்ட்போன்!

சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி இந்தியா கடந்த வாரம் Redmi A1 Plus என அழைக்கப்படும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

இதை ரூ.7000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் என்று கூறினால், அதை சட்டென்று நம்பவே முடியாது. ஏனென்றால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போனில் லெதர்-டெக்சர் டிசைனை வழங்குகிறது.

அதுமட்டுமா?

அதுமட்டுமா?

ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 5,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 8எம்பி டூயல் ஏஐ ரியர் கேமரா செட்டப் என இதன் முக்கிய அம்சங்களை "அடுக்கிக்கொண்டே" போகலாம்!

இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல், எதன் வழியாக வாங்க கிடைக்கும்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்!

அதிர்ச்சி ரிப்போர்ட்! 2022 முடிவில் அதிர்ச்சி ரிப்போர்ட்! 2022 முடிவில் "இந்த போன்கள்" எல்லாமே குப்பைக்கு போகும்!

இரண்டு ஸ்டோரேஜ்களின் கீழ் வாங்க கிடைக்கும்!

இரண்டு ஸ்டோரேஜ்களின் கீழ் வாங்க கிடைக்கும்!

ரெட்மி ஏ1 பிளஸ் ஆனது இன்று மதியம் (அதாவது அக்.17, 2022) 12 மணி முதல், அதன் இந்திய விற்பனையை தொடங்குகிறது. இது Flipkart, mi.com, Mi Home மற்றும் பிற ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும்.

​​ரெட்மி ஏ1 பிளஸ் ஆனது இந்தியாவில் 2 ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் வாங்க கிடைக்கும். 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.7,499 ஆகும். மறுகையில் உள்ள 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கும்.

அறிமுக சலுகை!

அறிமுக சலுகை!

லைட் க்ரீன், லைட் ப்ளூ மற்றும் கிளாசிக் பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் ரெட்மி ஏ1 பிளஸ் ஆனது, அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக ரூ.500 என்கிற தள்ளுபடியையும் பெறுகிறது.

ஆக உங்களால், 2ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.6,999 க்கும், 3ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.7,999 க்கும் சொந்தமாக்கி கொள்ள முடியும்!

2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!

வேறு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

வேறு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

பிளிப்கார்ட்டில், பேடிஎம் வேலட் வழியாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.100 என்கிற உடனடி கேஷ்பேக்கும் கிடைக்கும்.

மேலும் இந்த இ-காமர்ஸ் தளமானது (இந்த ஸ்மார்ட்போனுடன்) கூகுள் நெஸ்ட் மினியை ரூ.1,499 என்கிற தள்ளுபடி விலைக்கும், இரண்டாம் தலைமுறை கூகுள் நெஸ்ட்-ஐ ரூ.3,999 மற்றும் கூகுள் ஆடியோவை ரூ.3,499 என்கிற தள்ளுபடி விலைக்கும் வழங்குகிறது.

ரூ.6,999 க்கு Redmi A1 Plus வொர்த்-ஆ?

ரூ.6,999 க்கு Redmi A1 Plus வொர்த்-ஆ?

நீங்கள் ஒரு நல்ல என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றாலும் சரி அல்லது ரூ.8000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போனை தேடினாலும் சரி.. ரெட்மி ஏ1 பிளஸ் மாடலை "கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்!"

"ஓவர் பில்ட்-அப் ஆக இருக்கிறதே" என்று நினைப்பவர்கள் Redmi A1 Plus ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை அறிந்துகொண்ட பின்னர் சைலன்ட் ஆகிவிட அதிக வாய்ப்பு உள்ளது!

ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!

அப்படி என்ன அம்சங்களை பேக் செய்கிறது?

அப்படி என்ன அம்சங்களை பேக் செய்கிறது?

ரெட்மி ஏ1 பிளஸ் ஆனது 1600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 6.52-இன்ச் LCD டிஸ்ப்ளேவை பேக் செய்கிறது. இந்த டிஸ்பிளே 60Hz ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 nits பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது.

மேலும் இது மீடியாடெக் ஹீலியோஏ22 சிஸ்டம்-ஆன்-சிப் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது 3ஜிபி வரையிலான ரேம் மற்றும் 32ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்கள், பேட்டரி எல்லாம் எப்படி?

கேமராக்கள், பேட்டரி எல்லாம் எப்படி?

கேமராக்களை பொறுத்தவரை, Redmi A1 Plus-இல் 8MP மெயின் சென்சார் + 2MP டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. செல்பீக்களுக்காக இதில் ஒரு 5MP கேமரா உள்ளது.

பேட்டரியைப் பொறுத்தவரை, இது 10W சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்ட 5,000mAh மூலம் சக்தியூட்டப்படுகிறது. 4ஜி, ப்ளூடூத் 5.0, வைஃபை 2.4ஜி, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களை வழங்கும் இதுவொரு ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஸ்மார்ட்போன் ஆகும்!

Photo Courtesy: Xiaomi, Redmi

Best Mobiles in India

English summary
Latest Budget Smartphone Redmi A1 Plus India Sale Starts Today October 17th Check Price Offers Full Specifications.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X