பட்ஜெட் விலையில் பக்கா 5G போன்- நியாயமான அம்சங்களுடன் Vivo Y52t அறிமுகம்..

|

Vivo Y52t 5G ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளியாகி இருக்கிறது.

விலைக்கேற்ற நியாயமான அம்சங்கள்

விலைக்கேற்ற நியாயமான அம்சங்கள்

விவோ நிறுவனம் Vivo Y52t 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Y52 இன் மேம்பட்ட பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் விலைப் பிரிவில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் நியாயமான முறையில் இருக்கிறது.

அதாவது விலைக்கேற்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்

ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity SoC, டூயல் ரியர் கேமரா அமைப்பு, 60 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் அப் வசதியோடு அறிமுகமாகி இருக்கிறது.

இரண்டு வேரியண்ட்கள் மற்றும் மூன்று வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் அம்சங்களை விரிவாக பார்க்கலாம் வாங்க.

புதிய விவோ போனின் அம்சங்கள்

புதிய விவோ போனின் அம்சங்கள்

Vivo Y52t ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் நானோ சிம் பொருத்தக்கூடிய டூயல் சிம் கார்ட் ஸ்லாட் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆர்ஜின் ஓஎஸ் மூலம் இயங்குகிறது.இது மிகவும் சமீபத்திய ஓஎஸ் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 1600x720 பிக்சல்கள் தீர்மானத்துடன் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 600 nits பிரகாசத்தைக் கொண்டிருக்கிறது.

1TB வரை மெமரி விரிவாக்க வசதி

1TB வரை மெமரி விரிவாக்க வசதி

மிட்-ரேன்ஜ் விலைப் பிரிவு ஸ்மார்ட்போனுக்கு ஏற்ற சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனானது MediaTek Dimensity 700 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இதன் அதிகபட்ச வேரியண்ட் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். 1TB வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் உள்ளது.

டூயல் ரியர் கேமரா அமைப்பு

டூயல் ரியர் கேமரா அமைப்பு

Vivo Y52t ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 13 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா இருக்கிறது.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 8 எம்பி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

விவோ ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் உடன் கூடிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

5,000mAh பேட்டரி ஆதரவு

5,000mAh பேட்டரி ஆதரவு

Vivo Y52t ஸ்மார்ட்போனில் இணைப்பு ஆதரவுகளுக்கு என 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் v5.1 மற்றும் USB டைப்-சி போர்ட் ஆதரவு இருக்கிறது.

Vivo Y52t ஸ்மார்ட்போனில் 10W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்துக்கு என பயோமெட்ரிக் சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இது துல்லியமாக கைரேகை சென்சாராக செயல்படுகிறது. இதன் எடை 198 கிராம் ஆகும்.

Vivo Y52t விலை விவரங்கள்

Vivo Y52t விலை விவரங்கள்

Vivo Y52t ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 1,299 (தோராயமாக ரூ.14,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 1,499 (தோராயமாக ரூ.17,000) என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 19 முதல் விற்பனை

செப்டம்பர் 19 முதல் விற்பனை

Vivo Y52t ஸ்மார்ட்போனானது ஐஸ் லேக் ப்ளூ, Coconut Peach, பிளாக் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 19 முதல் விவோ சைனா ஸ்டோர் மற்றும் பிற ஆன்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்குவதற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo Y52 ஸ்மார்ட்போனானது கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மேம்பட்ட பதிப்பாக Vivo Y52t 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பிற நாட்டு சந்தையில் அறிமுகமாகுமா என்பதை நிறுவனம் தரப்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Latest Budget Price 5G Smartphone Launched by Vivo- Vivo Y52t 5G Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X