தனது பெஸ்ட் 5G Phone மீது ரூ.3,000 விலைக்குறைப்பை அறிவித்த Samsung!

|

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் மற்றொரு மிட்-ரேன்ஜ் 5G ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.

அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் என்ன? குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? ப்ரைஸ் கட்டிற்கு பிறகும் அதை நம்பி வாங்கலாமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்?

விலைக்குறைப்பை பெற்றுள்ள அந்த Samsung போன்?

விலைக்குறைப்பை பெற்றுள்ள அந்த Samsung போன்?

(தொடர்ச்சியான) விலைக்குறைப்பை பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில், லேட்டஸ்ட் ஆக சேர்ந்துள்ள மாடல் - Samsung Galaxy A53 5G ஆகும். நினைவூட்டும் வண்ணம், இந்த 5ஜி ஸ்மார்ட்போன் இந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டில் 5ஜி சேவை ஆனது எப்போது வேண்டுமானால் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற சூழ்நிலையில், நீங்கள் ஒரு 5ஜி-எனேபிள்டு ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், அதை வாங்க இதுவே சரியான நேரமாக இருக்கலாம்!

சரியான நேரத்தில் ரூ.3000 விலைக்குறைப்பை பெற்ற தரமான Samsung 5G போன்!சரியான நேரத்தில் ரூ.3000 விலைக்குறைப்பை பெற்ற தரமான Samsung 5G போன்!

Galaxy A53 5G-யின் 2 ஸ்டோரேஜ்களின் மீதும் Price Cut!

Galaxy A53 5G-யின் 2 ஸ்டோரேஜ்களின் மீதும் Price Cut!

அறிமுகமாகும் போது சாம்சங் கேலக்ஸி A53 5ஜி மாடல் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் வெளியானது. சுவாரசியமாக அந்த இரண்டுமே விலைக்குறைப்பை பெற்றுள்ளன.

அதாவது இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+128ஜிபி ஆகுல இரண்டுமே ரூ.3,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று உள்ளன.

Samsung Galaxy A53 5G பழைய விலை VS புதிய விலை:

Samsung Galaxy A53 5G பழைய விலை VS புதிய விலை:

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+128ஜிபி மாடல்கள் முறையே ரூ.34,999 மற்றும் ரூ.35,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டன.

தற்போது விலை வீழ்ச்சிக்கு பிறகு 6ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.31,999-க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.32,999 க்கும் வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் Awesome Black, Awesome Blue, Awesome Peach மற்றும் Awesome White என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த 8 போன்களை பற்றி விளம்பரம் வராது; ஆனாலும் மார்க்கெட்ல பெஸ்ட்டு!இந்த 8 போன்களை பற்றி விளம்பரம் வராது; ஆனாலும் மார்க்கெட்ல பெஸ்ட்டு!

ரூ.31,999 க்கு Samsung Galaxy A53 ஸ்மார்ட்போன் வொர்த்-ஆ?

ரூ.31,999 க்கு Samsung Galaxy A53 ஸ்மார்ட்போன் வொர்த்-ஆ?

வொர்த்-ஆ, இல்லையா என்று.. பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லிவிட முடியாது. முதலில் Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை அலச வேண்டும். பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அளவிலான FHD+ Super AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது. மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் பாதுகாக்கப்படுகிறது.

என்ன சிப்செட்? எவ்வளவு ஸ்டோரேஜ்?

என்ன சிப்செட்? எவ்வளவு ஸ்டோரேஜ்?

இந்த மிட்-ரேன்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1280 ப்ராசஸர் மற்றும் 6ஜிபி / 8ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜும் உள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்க முடியும்.

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

சாம்சங் Galaxy A53 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த Samsung One UI 4.1 மூலம் இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது 64MP மெயின் சென்சார் + 12MP அல்ட்ரா-வைட் கேமரா + 5MP டெப்த் சென்சார் + 5MP மேக்ரோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

பேட்டரி மற்றும் இதர அம்சங்கள் பற்றி?

பேட்டரி மற்றும் இதர அம்சங்கள் பற்றி?

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் Dolby Atmo- ஆல் டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஆனது IP67 மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது தண்ணீரை "எதிர்க்கும்" திறன் கொண்டது.

கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது வெறும் 30 நிமிடங்களில், ஸ்மார்ட்போனை 50% வரை சார்ஜ் செய்கிறது.

இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!

யாரெல்லாம் வாங்கலாம்? யாரெல்லாம் 'ஸ்கிப்' செய்யலாம்?

யாரெல்லாம் வாங்கலாம்? யாரெல்லாம் 'ஸ்கிப்' செய்யலாம்?

நல்ல விஷயங்களை பற்றி பேசும் போது, மிகவும் மிருதுவான 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, உயர்தர ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், IP67 மதிப்பீடுமற்றும் நல்ல டேலைட் கேமரா செயல்திறன் போன்றவைகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

அதே போல மோசமான விடயங்களை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட ப்ளோட்வேர், சராசரியான லோ-லைட் கேமரா செயல்திறன் மற்றும் பலவீனமான லோ லைட் வீடியோ ரெக்கார்ட் போன்றவைகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

Best Mobiles in India

English summary
Latest Best Mid Range Smartphone 2022 Samsung Galaxy A53 5G get Rs 3000 Price Cut

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X