2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் தான் நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதாவது இந்த நோக்கியா 5ஜி போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன? எங்கு விற்பனைக்கு வருகிறது? என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி60 5ஜி

நோக்கியா ஜி60 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Nokia G60 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. இந்த புதிய நோக்கியா 5ஜி போனை இன்று நோக்கியா இந்தியா இணையதளத்தில் வாங்க முடியும். பிளாக் மற்றும் ஐஸ் நிறங்களில் வெளிவந்துள்ளது நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் 2 வருஷம் வாராண்டியும் இந்த நோக்கியா ஜி60 5ஜி போனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கெட்ச் எங்களுக்கு இல்ல.. உனக்கு! மிரண்டு போன Elon Musk.. பழைய யூசர்களின் பலத்த சம்பவம்!ஸ்கெட்ச் எங்களுக்கு இல்ல.. உனக்கு! மிரண்டு போன Elon Musk.. பழைய யூசர்களின் பலத்த சம்பவம்!

500 நிட்ஸ் ப்ரைட்னஸ்

500 நிட்ஸ் ப்ரைட்னஸ்

நோக்கியா ஜி60 5ஜி ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080×2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன்.

50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!

 மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

நோக்கியா ஜி60 5ஜி போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
ஆதரவு உள்ளது.

சந்தேகப்பட்டது போலவே நடந்துருச்சு.. 5G பெயரை சொல்லி Jio வைக்கும் புதிய வேட்டு!சந்தேகப்பட்டது போலவே நடந்துருச்சு.. 5G பெயரை சொல்லி Jio வைக்கும் புதிய வேட்டு!

ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்

நோக்கியா ஜி60 5ஜி போனில் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மேம்பட்ட செயல்திறனை வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

இன்று முதல் அமல்! WhatsApp-ல் முக்கிய மாற்றம்.. கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு எடுத்துக்கிட்டாங்க!இன்று முதல் அமல்! WhatsApp-ல் முக்கிய மாற்றம்.. கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு எடுத்துக்கிட்டாங்க!

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸமார்ட்போன். மேலும் நைட் மோட் 2.0, டார்க் விஷன் மற்றும் AI போர்ட்ரெய்ட் போன்ற கேமரா அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

போச்சு..! எலான் மஸ்க் செய்வதை அப்படியே தன் கம்பெனியில் செய்யும் மார்க் ஜூக்கர்பெர்க்!?போச்சு..! எலான் மஸ்க் செய்வதை அப்படியே தன் கம்பெனியில் செய்யும் மார்க் ஜூக்கர்பெர்க்!?

20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா ஜி60 5ஜி போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பவர் பட்டன் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா போன்.

அங்கே என்ன காத்திருக்குமோ? யாருக்கும் தெரியாது.. நிலவின் அங்கே என்ன காத்திருக்குமோ? யாருக்கும் தெரியாது.. நிலவின் "மர்ம பகுதிக்கு" செல்லும் ISRO!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Latest 5G Smartphone 2022 Nokia G60 first India sale on today november 8th: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X