திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!

|

"கையில காசு கொஞ்சம் கம்மியா இருக்கு... அதனால தான் இன்னும் 'அந்த' லேட்டஸ்ட் OnePlus ஸ்மார்ட்போனை வாங்கல!" என்று பதில் சொல்லிச் சொல்லி சலித்து விட்டதா?

ஃப்ரீயா விடுங்க! அடுத்தமுறை கேட்டால்.. "வாங்கிட்டாம்ல!" என்று கெத்தாக பதில் சொல்லுங்கள்.

அதெப்படி?

அதெப்படி?

ஏனெனில் இந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகமான லேட்டஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அது என்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை விவரங்கள் என்ன? Price Cut-க்கு பின்னரும் கூட இதை நம்பி வாங்கலாமா? அது என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!

Price Cut-ஐ பெற்றுள்ள அந்த OnePlus போன்?

Price Cut-ஐ பெற்றுள்ள அந்த OnePlus போன்?

இந்தியாவில், ஒன்பிளஸின் 2022 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக அறிமுகமான OnePlus 10 Pro மாடல் தான் ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது.

ஆம்! OnePlus நிறுவனம் இந்தியாவில் அதன் முதன்மை ஸ்மார்ட்போன் ஆன OnePlus 10 Pro-வின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம், இந்த ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வருகிறது. சுவாரசியமாக இந்த இரண்டுமே ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளன.

OnePlus 10 Pro பழைய விலை vs புதிய விலை:

OnePlus 10 Pro பழைய விலை vs புதிய விலை:

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது - அது 8GB+128GB மற்றும் 12GB+256GB ஆகும்.

முன்னதாக 8ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.66,999 க்கும் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.71,999 க்கும் வாங்க கிடைத்தது. ஆனால் இனிமேல் - அதாவது விலைக் குறைப்புக்கு பிறகு - முறையே ரூ.61,999 மற்றும் ரூ.66,999 க்கும் விற்பனை செய்யப்படும்.

நினைவூட்டும் வண்ணம், இது வல்கானிக் பிளாக் மற்றும் எமரால்டு ஃபாரஸ்ட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

விலைக்குறைப்பு மட்டும் தானா? பேங்க் ஆபர் இல்லையா?

விலைக்குறைப்பு மட்டும் தானா? பேங்க் ஆபர் இல்லையா?

இருக்கிறது! OnePlus 10 Pro-வை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனம் சில கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது.

நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனராக இருந்தால், 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.6,000 என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களையும் தேர்வு செய்யலாம்.

இதுதவிர்த்து ஒன்பிளஸ் அப்கிரேட் புரோகிராமின் கீழ் ரூ.5,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் அணுக கிடைக்கும்.

ரூ.60,000 க்கு OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் வொர்த்-ஆ?

ரூ.60,000 க்கு OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் வொர்த்-ஆ?

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடல் ஆனது முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 9 ப்ரோவை விட "மிகவும் தேவையான" மேம்படுத்தல்களை கொண்டுள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம். எப்படி பார்த்தாலும் இது ஒரு நல்ல, தரமான ஸ்மார்ட்போன் தான்.

OnePlus 9 Pro உடன் ஒப்பிடும்போது, ​OnePlus ​10 Pro 5G ஆனது வேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட பெரிய பேட்டரி, சற்றே அதிக திறன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, அதிக 5G பேண்டுகளுடன் கூடிய சக்திவாய்ந்த சிப்செட், சிறந்த செல்பீ கேமரா மற்றும் அழகான வடிவமைப்பை வழங்குகிறது.

முக்கியமாக S22 மற்றும் iPhone 13-ஐ விட விலை குறைவு!

முக்கியமாக S22 மற்றும் iPhone 13-ஐ விட விலை குறைவு!

எல்லாவற்றை விட முக்கியமாக சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் ஐபோன் 13 மாடலின் பேஸிக் வேரியண்ட்-ஐ விட ஒன்பிளஸ் 10 ப்ரோவின் டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை குறைவாக உள்ளது (இப்போது இன்னும் குறைவு). இதுவே 10 ப்ரோ மீதான நல்ல மதிப்பை உருவாக்குகிறது.

புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது மறக்காம புது ஃப்ரிட்ஜ் வாங்கும் போது மறக்காம "இது" இருக்கானு கேளுங்க! இல்லனா வாங்காதீங்க!

OnePlus 10 Pro-வின் முக்கிய அம்சங்கள்:

OnePlus 10 Pro-வின் முக்கிய அம்சங்கள்:

- 6.7 இன்ச் Quad HD+ Fluid AMOLED டிஸ்ப்ளே (120Hz)
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 12

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48MP மெயின் + 50MP அல்ட்ரா-வைட் + 8MP டெலிஃபோட்டோ
- 32MP செல்பீ கேமரா

- 80W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50 வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- 5000mAh பேட்டரி.

Best Mobiles in India

English summary
Latest 2022 Flagship Smartphone OnePlus 10 Pro Get Rs.5000 Price Cut in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X