யாருக்கெல்லாம் பெரிய ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன் 'செட்' ஆகும்.?

பெரிய சைஸ் ஸ்மார்ட்போன்கள் நமக்கு சரியான தேர்வா? இதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வசதிகள் என்ன?

By Siva
|

ஆரம்பத்தில் ஸ்மார்ட்போன்கள் 3.5 இன்ச் அல்லது 4 இன்ச்களில் வெளிவந்தது. ஆனா நாள் ஆக ஆக ஸ்மார்ட்போனின் சைஸ்கள் அதிகமாகி கொண்டே வருகிறது. தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் 4.7 இன்ச்களில் இருந்து 5.2 இன்ச்கள் வரை வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒருசில ஸ்மார்ட்போன்கள் 5.5 இன்ச்களிலும் வருகிறது.

யாருக்கெல்லாம் பெரிய ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன் 'செட்' ஆகும்.?

இந்நிலையில் ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள போட்டி மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு காரணமாக பெரிய சைஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அதிகளவில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆப்பிள் உள்பட பல நிறுவனங்களின் பெரிய சைஸ் போன்கள் இந்த வருடத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் கருவிக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

ஆனால் அதே நேரத்தில் பெரிய சைஸ் ஸ்மார்ட்போன்கள் நமக்கு சரியான தேர்வா? இதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வசதிகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்

அதிக தகவல்களை தெரிந்து கொள்ளலாம்:

அதிக தகவல்களை தெரிந்து கொள்ளலாம்:

பெரிய ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும்போது ஒரே ஒரு சிங்கிள் ஸ்குரோலில் அதிக விஷயங்களை படிக்கலாம். இணையத்தில் இருக்கும்போது அதிக தகவல்களை ஒரே பக்கத்தில் தெரிந்து கொள்வது எளிதாக இருக்கும். மேலும் பெரிய ஸ்க்ரீன் இருந்தால் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் நீளமான ஸ்டேடஸ்களை எளிதில் போடலாம்.

மேலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஸ்பிளிட் ஸ்க்ரீன்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு ஆப்ஸ்களை எளிதில் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி போட்டோ, வீடியோ, கேம்ஸ் ஆகியவற்றை பெரிய ஸ்க்ரீனில் பார்ப்பது ஒருவித புது அனுபவத்தை கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது

பாக்கெட்டில் வைக்க முடியுமா?

பாக்கெட்டில் வைக்க முடியுமா?

பெரிய சைஸ் ஸ்மார்ட்போன்கள் என்றால் கண்டிப்பாக பெரிய சைஸ் பேட்டரி இருக்கும். இந்த பேட்டரிகளின் சக்தி அதிகமாக இருக்கும் என்பதால் அதிகளவு பயன்படுத்த வசதியாக இருக்கும்.

மேலும் டைப் செய்யும்போது இரண்டு கைகளில் உள்ள விரல்களையும் கம்ப்யூட்டர் கீபோர்டு போல பயன்படுத்தலாம். ஆனால் அதே நேரத்தில் பெரிய சைஸ் ஸ்மார்ட்போன்களை பாக்கெட்டுகளில் வைப்பது கொஞ்சம் சிரமம்தான். இல்லையெனில் இதற்கென தனியாக பேண்டில் பெரிய சைஸ் பாக்கெட்தான் வைக்க வேண்டும்

ஒரே கையை வைத்து பயன்படுத்த முடியும்

ஒரே கையை வைத்து பயன்படுத்த முடியும்

பொதுவாக பெரிய சைஸ் ஸ்மார்ட்போன்களை ஒரே ஒரு கையினால் யன்படுத்துவது மிக எளிது. ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் என எந்த போனாக இருந்தாலும் பெரிய சைஸ் போன்களில் டைப் செய்யவோ, பிரெளஸ் செய்யவோ ஒரே ஒரு கையை மட்டும் பயன்படுத்தி உபயோகம் செய்வது மிக எளிது. கீ போர்டிலும் ஒரே கையில் டைப் அடித்தும் கொள்ளலாம்

சார்ஜ் என்ன ஆகும் என்பது தெரியுமா?

சார்ஜ் என்ன ஆகும் என்பது தெரியுமா?

சாதாரண ஸ்க்ரீன் போன்களை விட பெரிய ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் சார்ஜை எடுத்து கொள்ளும். என்னதான் அதில் பெரிய சைஸ் பேட்டரி இருந்தாலும் பெரிய சைஸ் ஸ்க்ரீனுக்கு அதிக பவர் தேவை என்பதால் மொத்த பவர் வெகுவிரைவில் காலியாகும் நிலை ஏற்படலாம். அதிலும்

எல்சிடி பேனல் உள்ள பெரிய சைஸ் போன் என்றால் கேட்கவே வேண்டாம். மிக அதிக அளவிலான சார்ஜை சாப்பிட்டுவிடும்.

சரியான சைஸ் போனை தேர்வு செய்யுங்கள்:

சரியான சைஸ் போனை தேர்வு செய்யுங்கள்:

பெரிய ஸ்க்ரீன் போன் இருந்தால் தான் அனைத்து வசதிகளையும் பெற முடியும் என்ற நிலை கண்டிப்பாக இல்லை. ஒருசில வசதிகள் பெரிய ஸ்க்ரீனில் இருந்தாலும் உங்கள் கைக்கு அடக்கமான ஸ்மார்ட்போனை செலக்ட் செய்வது சால சிறந்தது.

உங்கள் உள்ளங்கையில் மிகச்சரியாக பொருந்தும் அளவிற்கான போனை செலக்ட் செய்தால் விரல்களை பயன்படுத்துவதில் எந்தவித சிரமமும் இருக்காது. மேலும் பெரிய சைஸ் ஸ்க்ரீன் உள்ள மாடல் மிக விரைவில் காலாவதியாகி வருகின்றது என்பதையும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Decide the right size of smartphone display for your usage from here. There are pros and cons of using a large screen phone as well.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X