Just In
- 7 hrs ago
போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 8 hrs ago
டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடபோன் ஐடியா.!
- 1 day ago
பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.
- 1 day ago
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- Sports
என்ன நினைச்சு இப்படி பண்றாங்கன்னே தெரியலையே.. கூடாரத்தை காலி செய்த மும்பை இந்தியன்ஸ்.. செம பிளான்!
- News
இன்று ஒரு நாள் மட்டும் ஆஃபர்.. நீங்க கமலாவா யூ ஆர் செலக்டட்!.. நீங்கள் விமலான்னா யூ ஆர் ரிஜக்டட்!
- Movies
முதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்!
- Automobiles
மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு
- Finance
டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிளிப்கார்ட்டில் 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஜி8எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை- காரணம் இதுதான்!
பிளிப்கார்ட் பிக்பில்லியன் தின விற்பனையில் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்ட பிறகு 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஜி8எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி8 எக்ஸ் ஸ்மார்ட்போன்
எல்ஜி நிறுவனம் தங்கள் பிரீமியம் எல்ஜி ஜி8 எக்ஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.350 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்
பிளிப்கார்ட் பண்டிகை தின விற்பனையில் எல்ஜி டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் விலை குறைப்பு, கேஷ்பேக், விலை இல்லா இஎம்ஐ விருப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நிறுவனம் 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகை விலையில் விற்பனை செய்த ஸ்மார்ட்போன்
இந்த ஸ்மார்ட்போன் ஆரம்பத்தில் ரூ.49,999 என்ற விலையில் விற்கப்பட்டது. பண்டிகை தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,900 என விற்கப்பட்டு வந்தது. தற்போது பிளிப்கார்ட்டில் Coming Soon(விரைவில் வரும்) என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இதன் விலை ரூ.21,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை
விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டதன் மூலம் எல்ஜி ஜி8எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நுகர்வோர் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் விரைவில் அதிக போன்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக எல்ஜி தெரிவித்துள்ளது.
(வீடியோ)சூரியனை விட மிகப்பெரிய நட்சத்திரத்தை விழுங்கும் கருந்துளை: அரிய நிகழ்வு!

எல்ஜி ஜி8எக்ஸ் தின்க்யூ அம்சங்கள்
எல்ஜி ஜி8எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் விற்கப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்கிரீன், வாட்டர் டிராப் அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக 180 டிகிரி கோணங்களில் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளம்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என்எம் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுவதால் இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ்
எல்ஜி ஜி8 எக்ஸ் தின்க்யூ சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்புக்கான ஸ்லாட் வசதியும் இதில் இருக்கிறது.

32 எம்பி செல்பி கேமரா
எல்ஜி ஜி8 எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் என டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, பின்பு 32 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

4000எம்ஏஎச் பேட்டரி
இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, பின்பு குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 வசதி, வைஃபை, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
source: themobileindian.com
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190