அழகான வடிவமைப்பில் புதிய க்யோசெரா ஸ்மார்ட்போன்!

இப்பொழுதெல்லாம் எந்த புதிய அப்ளிக்கேஷன்களாக இருப்பினும் வாடிக்கையாளர்கள் அதை உடனே டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். ஐசிஎஸ் இயங்குதளத்தினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் நிறைய அப்ளிக்கேஷன்கள் உள்ளன.
கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 3.5 இஞ்ச் அகன்ற திரை வசதி ஐபிஎஸ் எல்சிடி திரை தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கும். இதனால் 480 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இது சிடிஎம்ஏ நெட்வொர்க் வசதியை வழங்கும் என்பது தான்.
இயங்குதளம் மட்டும் சிறப்பாக இருந்தால் போதாது, அதன் பிராசஸரும் மிக முக்கியமான ஒன்று. இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் எம்எஸ்எம்-8655 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வேகத்திற்கு எந்த வித குறையும் இருக்காது.
கிளிக் செய்யும் புகைப்படங்களை பார்த்தவுடன், சூப்பர் என்று சொல்ல வைக்கும் சிறப்பான துல்லியத்தினை வழங்கும் 3.2 மெகா பிக்ஸல் கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்கள் 2 ஜிபி மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்யும். இதில் பிரவுசிங் வசதிக்காக வைபை தொழில் நுட்பத்தினையும் பெற முடியும்.
1,500 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications