வாட்டர் ப்ரூஃபில் அசத்தும் கியோசெரா ஸ்மார்ட்போன்!

வாட்டர் ப்ரூஃப் வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஹைட்ரோ என்று பொருத்தமான பெயரை தான் தேர்வு செய்திருக்கிறது கியோசெரா நிறுவனம். 3.5 இஞ்ச் திரையில் அசத்தும் இந்த ஸ்மார்ட்போன் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.
மல்டி தொடுதிரை வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இந்த இயங்குதளம் சரியாக இயங்குவதற்கு இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் கியூவல்காம் எம்எஸ்எம்8655 பிராசரை கொண்டது. இதில் முகப்பு கேமரா இல்லை ஆனால் 3.2 பிக்ஸல் கேமராவினை வழங்கும்.
இதனால் அழகான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வததியினையும் பெற முடியும். வாட்டர் ப்ரூஃப் வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 3ஜி தொழில் நுட்பம் இல்லாமல் போகுமா? இந்த ஸ்மார்ட்போனில் 3ஜி தொழில் நுட்பத்தினை எளிதாக பயன்படுத்தலாம்.
பிரவுசிங் வசதிக்கு இதில் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்தினையும் பெறலாம். பேட்டரியின் ஆற்றலும் அதிகம் தான். 1,500 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் நீடித்து உழைக்கும் பேட்டரியினை பெற முடியும்.
அமெரிக்காவில் ரைஸ் என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்ட கியோசெரா நிறுவனம் அடுத்தாக ஹைட்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவது பற்றி இன்னும் எந்த தகவல்களும் இல்லை.


Click it and Unblock the Notifications