Home
Mobile

இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.6,999/- மட்டும் தானா.? வாவ்.!

The Kult Gladiator packs a huge 4000mAh battery under-the-hood.

By Muthuraj

உள்நாட்டு உற்பத்தியாளரான குல்ட் நிறுவனம் அதன் இரண்டாவது சாதனமான குல்ட் பியாண்ட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தபிறகு தற்போது அதன் மூன்றாவது சாதனமான குல்ட் கிளாடியேட்டர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.6,999/- மட்டும் தானா.? வாவ்.!

குல்ட் கிளாடியேட்டர் ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவெனில் அதன் பெரிய 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா ஆகியவைகள் தான். ரூ.6,999/- என்றவொரு பட்ஜெட் விலை நிர்ணயம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும்.

இரட்டை சிம் கார்டு

இரட்டை சிம் கார்டு

இதர அம்சங்களை பொறுத்தமட்டில், குல்ட் கிளாடியேட்ட ஒரு உலோகம் வடிவமைப்பு பெற்றுள்ளது. இரட்டை சிம் கார்டுகளை ஆதரிக்கிறது மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இயக்கருவி 1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி6737 எஸ்ஓசி உடனான 3 ஜிபி ரேம் மற்றும் மாலி- டி720 ஜிபியூ கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

2.5டி வளைந்த கண்ணாடியுடனான ஒரு 5.5 அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தமட்டில் ஆட்டோஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் நிலையான ஃபோகஸ் கொண்ட செல்பீ கேமரா கொண்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஒரு கைரேகை ஸ்கேனர், எல்இடி நோட்டிபிகேஷன் லைட் மற்றும் அன்லாக் செய்யாமலேயே முன்னுரிமை வழங்கப்பட்ட பயன்பாடுகளைத் திறக்க உதவும் ஸ்மார்ட் அவேக் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

முன்னர் குறிப்பிட்டபடி, குல்ட் கிளாடியேட்டர் ஒரு பெரிய 4000எம்ஏஎச் பேட்டரியின் கொண்டு இயங்குகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி4.0, ஜிபிஎஸ், எஃப்எம் வாரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை வழங்குகிறது. அளவீட்டில் 156.9x77.2x9.3 மிமீ உள்ளது.

ஒருமுறை திரை மாற்று உத்தரவாதம்

ஒருமுறை திரை மாற்று உத்தரவாதம்

கருப்பு நிற மாறுபாட்டில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ள குல்ட் கிளாடியேட்டர், ஒருமுறை திரை மாற்று உத்தரவாதம் மற்றும் கூடுதல் 4ஜி தரவை வழங்கும் சலுகைகளுடன் வெளியாகவும் வாய்ப்புகளும் உள்ளன.

Best Mobiles in India

English summary
Kult Gladiator with 4000mAh battery, Android Nougat launched in India at Rs 6,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X