பட்ஜெட் விலையில் புதிய குல்ட் ஆம்பிஷன் அறிமுகம்.!
இக்கருவி 5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (720-120)பிக்சல் தீர்மானம் மற்றும் மீடியாடெக் எம்டிகே6737 குவாட்-கோர் செயலியை கொண்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளரான குல்ட் நிறுவனம் இப்போது பட்ஜெட் விலையில் புதிய குல்ட் ஆம்பிஷன் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் டிசம்பர் 11-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் அமேசான் வலைதளத்தில் இந்த குல்ட் ஆம்பிஷன் ஸ்மார்ட்போனை எளிமையாக வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருவி 5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (720-120)பிக்சல் தீர்மானம் மற்றும் மீடியாடெக் எம்டிகே6737 குவாட்-கோர் செயலியை கொண்டுள்ளது.
இந்த குல்ட் ஆம்பிஷன் ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

குல்ட் ஆம்பிஷன் ஸ்மார்ட்போனில் 13மெகாபிக்சல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் இதனுடைய முன்புற கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஒடிஜி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் 2600எம்ஏஎச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

டிசம்பர் 11-ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications