இந்தியாவில் கோடாக் எக்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் (விலை & அம்சங்கள்).!

|

இந்தியாவில் கோடக் எக்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ19,990/- என்ற விலையில், 18-ஆம் தேதி 2017 ஜுலை 4:00 மணி முதல் இந்த கருவி ப்ளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும். இந் கைபேசியின் முக்கிய சிறப்பம்சம் அதன் கேமராக்கள் ஆகும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்கெனவே விற்பனைக்கு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன், மிகவும் கவர்ந்திழுக்கும் புகைப்படங்களை கைப்பற்ற உதவும் என்பதில் சந்தேகமே இல்லை - கோடாக் நிறுவன தயாரிப்பாகிற்றே.!

இந்தியாவில் கோடாக் எக்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் (விலை & அம்சங்கள்).!

சாதனத்தின் ஒளியியல் பகுதியில் இருந்து அம்சங்களை தொடங்குவோம். கோடாக் எக்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது எப் / 2.0 துளசியுடன் கூடிய 21எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. ப்ரண்ட் பேஸ் டிடெக்ஷன் ஆட்டோ ஃபோகஸ் (PDAF) மற்றும் எப்/2.2 துளை கொண்ட 13எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்ளது.

நிகழ்நேரத்தில் மாற்றங்களும் செய்யலாம்

நிகழ்நேரத்தில் மாற்றங்களும் செய்யலாம்

மேலும் இதன் கேமராவில் - எச்டிஆர், லேண்ட்ஸ்கேப், போர்ட்ரயட்,, மேக்ரோ, கேம்ஸ், நைட் டைம், பானாரோமா மற்றும் போக்கே விளைவுகள் உள்ளிட்ட அமைப்புகளை நிகழ்நேரத்தில் மாற்றங்களும் செய்யலாம். அதற்கு உதவும் வண்ணம் இதனுள் உள்கட்டமைக்கப்பட்ட கேமரா ஆப் ஒன்றும் உள்ளது.

இரவுநேர புகைப்படத்தை கைப்பற்றும் திறன்

இரவுநேர புகைப்படத்தை கைப்பற்றும் திறன்

இதன் கேமராவின் மானுவல் மோட் முறையில் - எக்ஸ்போஷர், ஐஎஸ்ஓ, போகஸ், வைட் பேலன்ஸ் மற்றும் ஷட்டர் ஸ்பீட் ஆகியவைகளை சரிசெய்ய முடியும். மற்றும் அதுசார்ந்த மாற்றங்கள் செய்யப்படும்போது திரையில் முடிவுகளும் தோன்றும். இதன் கேமரா உயர் தரமான குறைந்த ஒளி மற்றும் இரவுநேர புகைப்படத்தை கைப்பற்றும் திறன் கொண்டுள்ளது.

ஆர்க்சாப்ட் நைட் ஷாட் தொழில்நுட்பம்

ஆர்க்சாப்ட் நைட் ஷாட் தொழில்நுட்பம்

அந்த திறனுக்கு கோடாக் சான்றளிக்கப்பட்ட லென்ஸ் பூச்சுடன் இணைந்த ஆர்க்சாப்ட் (ARCSOFT) நைட் ஷாட் தொழில்நுட்பம் சாட்சி. இதன் மூலம் ஒளி சென்சரை அடையும், ஐஎஸ்ஓ இரைச்சல் குறையும், அண்டர்எக்ஸ்போஸ்டு பகுதிகள் பிரகாசிக்கும் மற்றும் மெதுவான ஷட்டர் வேகத்தில் புகைப்படம் ப்ளர் ஆவதையும் தடுக்கும்.

எடிட்டிங் செய்ய வேண்டிய தேவை குறைகிறது.

எடிட்டிங் செய்ய வேண்டிய தேவை குறைகிறது.

டைனமிக் ஃபோகஸ் மற்றும் ஆப்ஜெக்ட் டிராக்கிங் ஆனது கேமராவின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுபதின் மூலம் இக்கருவி மிருதுவான, தெளிவான படங்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்றது. ஆகையால், எந்தவொரு புகைப்படமாக இருப்பினும் கைப்பற்ற பின்னர் எடிட்டிங் செய்ய வேண்டிய தேவை குறைகிறது.

3000எம்எச்ஏச் பேட்டரி

3000எம்எச்ஏச் பேட்டரி

ரூ.19,990/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள கோடாக் எக்ட்ரா ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தமட்டில் இந்த ஸ்மார்ட்போன் 2.3ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு டீக்கா-கோர் ஹீலியோ எக்ஸ்20 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி விரிவாக்கக்கூடிய உள் சேமிப்பும் கொண்டுள்ளது. மென்பொருள்களை பொறுத்தமட்டில், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷல்லோவில் இயங்குகிறது உடன் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 3000எம்எச்ஏச் பேட்டரி மூலம் சாதனம் சக்தியூட்டப்படுகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
KODAK EKTRA Smartphone launched in India for Rs. 19,990. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X