Just In
- 45 min ago
ஒருவழியாக செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்: சாதனை படைத்த நாசா.!
- 49 min ago
CCTV கேமராவில் பதிவான 'குட்டி டைனோசர்' போன்ற உயிரினம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..
- 14 hrs ago
அந்த காலம்தான் மாஸ்: ஐகியர் அறிமுகம் செய்த விண்டேஜ் வைப்ஸ்- ப்ளூடூத் ரேடியோ வாங்கலாமா?
- 15 hrs ago
ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
Don't Miss
- News
கொரோனா அச்சம்: டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன்- பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
- Automobiles
இராணுவத்திற்கான குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ கார்!! பொது சாலையில் சோதனை ஓட்டம்!
- Sports
நான் எல்லாம் இப்ப முக்கியமே இல்லை.. சிஎஸ்கே குறித்து உருக்கமாக பேசிய இம்ரான் தாஹிர்.. என்ன மனுஷன்யா!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
5 இன்ச் எச்டி டிஸ்பிளே; நௌவ்கட் உடன் யுவா 2 - அடுத்த சூப்பர் பட்ஜெட் ரெடி.!
இந்த மாத தொடக்கத்தில் கார்போன் நிறுவனம் அதன் கே9 ஸ்மார்ட் செல்பீ ஸ்மார்ட்போனை தொடங்கிய கையோடு, மிக விரைவில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை தொடங்குகிறது என்பதுபோல் தெரிகிறது.
அந்த புதிய வரவானது கார்போன் யுவா 2 என்று அழைக்கப்படலாம். இந்த புதிய கார்பன் கருவியானது ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் என்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும், இந்த தகவலை பகிர்ந்து கொள்ளும் நேரத்தில் இக்கருவியின் அதன் விலை அல்லது கிடைக்கும்தன்மை பற்றிய எந்த வார்த்தையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலிகார்பனேட் பின்புறம்
கார்போன் யுவா 2 ஸ்மார்ட்போன் ஆனது வலைத்தளத்தில் பிளாக், ப்ளூ & ஷாம்பெயின் ஆகிய வண்ண விருப்பங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் வெளியாகியுள்ள பட்டியலின் படி, கார்போன் யுவா 2 ஆனது, ஒரு பிரஷ்டு உலோக பூச்சுடனான பாலிகார்பனேட் உடலை அதன் பின்புறம் கொண்டிருக்கும்.

சேமிப்பு
மேலும், 720x1280 என்கிற பிக்சல்கள் அளவிலான தீர்மானம் கொண்ட ஒரு 5 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டிருக்கும். 1.2ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படும் இக்கருவியானது 2 ஜிபி ரேம் மற்றும் தொலைபேசியினுள் 16 ஜிபி அளவிலான உள் சேமிப்பு மற்றும் எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரையிலான சேமிப்பு விரிவாக்க ஆதரவும் கொண்டுள்ளது.

கேமரா
ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்பக்க கேமராவும், முன்பக்கம் 3.2 மெகாபிக்சல் என்ற நிலையான-ஃபோகஸ் கொண்ட செல்பீ கேமராவும் கொண்டுள்ளது.

பேட்டரி
இக்கருவி ஒரு 2250எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இது 8 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 180 மணி நேரம் வரையிலான காத்திருப்பு நேரத்தை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது. மேலும், ஸ்மார்ட்போன் இரட்டை வால்யூம், வோல்ட், ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் ஆகிய அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

விலை நிர்ணயம்
அளவீட்டில் 144.2 x 72.4 x 9.6 மிமீ மற்றும் 170 கிராம் எடையும் கொண்டுள்ள கார்பன் யுவா 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களை வைத்து பார்க்கும்போது இதுவொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்குமென்று தோன்றுகிறது. அதாவது இதன் விலை நிர்ணயம் ரூ.4,000 - ரூ.6,000/-க்குள் எங்காவது ஒருபுள்ளியை எட்டலாமென்று எதிர்பார்க்கிறோம்.

கார்போன் கே9 ஸ்மார்ட் செல்பீ
முன்னர் வெளியான கார்போன் கே9 ஸ்மார்ட் செல்பீ ஸ்மார்ட்போனின் அம்சங்களை நினைவுபடுத்தும் வண்ணம், இது 854 x 480 பிக்சல்கள் என்கிற திரை தீர்மானம் கொண்ட ஒரு 5 அங்குல எப்டபுள்யூவிஜிஏ டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் 8-மெகாபிக்சல் செல்பே கேமரா உள்ளது, இதுநைட் ஷாட் பயன்முறை மற்றும் பியூட்டி மோட் உடன் வருகிறது. பின்புறத்தில்,எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ரியர் கேம் உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்
இந்த தொலைபேசி 1.1ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது 8 ஜிபி உள் சேமிப்புடன் 1ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக நினைவகத்தை 32 ஜிபி வரை விரிவாக்கலாம். ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி ஒரு 2300எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது நிறுவனம் 8 மணி நேரம் வரையிலான பேச்சு நேரம் மற்றும் 180 மணி நேரம் வரையிலான காத்திருப்பு நேரத்தை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது.

இன்பில்ட் போட்டோ மற்றும் வீடியோ எடிட்டர்
இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், இந்த சாதனம் 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. உங்களுடைய விருப்பங்களைப் பொருத்து உங்கள் படங்களைத் தனிப்பயனாக்க முறையில் எடிட் செய்யவும் மற்றும் வீடியோக்களை எடிட் செய்ய இதன் இன்பில்ட் போட்டோ மற்றும் வீடியோ எடிட்டர் உதவும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999